திருமலையில் மீண்டும் பதற்றம்; பொலிஸ் பாதுகாப்போடு அதே புத்தர் சிலை

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைக்க முயற்சிக்கும் நிலை தொடர்வதால் குறித்த பகுதியில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே களத்தில் பெருமளவான பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளது. குறித்த புத்தர் சிலையை அந்த இடத்திலேயே மீண்டும் வைப்பதற்கான முயற்சியை அங்கு கூடியுள்ள பௌத்த பிக்குகள் தற்போது தீவிரமாக முயற்சித்து வருவதாகவும் தெரியவருகின்றது. மேலும், பெரும்பான்மை இன மக்களும் அதிகமாக அவ்விடத்தில் ஒன்று திரண்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, சம்பவம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் […]

மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை – நாமல் ராஜபக்ஷ

  தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை. அரசாங்கத்திற்கு எதிரான அனைத்துக் கட்சிகளும் 21 ஆம் திகதி நுகேகொடைக்கு வந்து அரசாங்கத்திற்கு எதிரான தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ஷ அழைப்பு விடுத்தார். கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, “இன்று, விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை […]

திருகோணமலையில் புத்தர் சிலையை அகற்றுதல்: ஊடக சந்திப்பு

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையில் புத்தர் சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின் சுருக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முக்கிய கண்டனமும் குற்றச்சாட்டுகளும் இந்தச் சம்பவம், நாட்டில் உள்ள பௌத்த மக்களிடையே பெரும் மன உளைச்சலையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனை அனைவரும் கண்டிப்பதாகவும் நுகவன் பெல்லந்துடாவ குறிப்பிட்டார். குற்றச்சாட்டுகள்: திருகோணமலை மாவட்டத்திலுள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் மிகவும் பழமையான தஹம் பாடசாலை (ஞாயிறு பாடசாலை) இயங்கி வந்த […]

அரசாங்கம் செல்லும் வழி முறையற்றது – உதய கம்மன்பில

திசைக்காட்டியுடன் எம்மை ஒருபோதும் ஒப்பிட வேண்டாம். 1977, 1987 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வன்முறையின் ஊடாக ஆட்சி அதிகாரத்தை பெற்றதை போன்றதொரு எண்ணம் எம்மிடம் இல்லை. தேர்தல் இடம்பெறும் வரை காத்திருப்போம். எதிர்வரும் 21ஆம் திகதி நுகேகொடையில் அதிக தலைகளை காண முடியும் என்ற நம்பிக்கையுள்ளது என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(16) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், சமூக வலைத்தளம் மற்றும் ஊடகங்களினூடாக எம்மை கடுமையாக […]

மக்களின் வறுமை குறித்த சரியான நிலைப்பாடொன்று அரசாங்கத்திடம் இல்லை – சஜித் பிரேமதாச

மக்கள் மாற்றுத் தரப்பை நாடியிருந்தாலும், அந்த மாற்றுத் தரப்பு சரியாக அமைந்து காணப்படாமையினால் அவர்களின் எதிர்பார்ப்புகள் இன்று தோல்வி கண்டுள்ளன. கிளீன் ஶ்ரீலங்கா திட்டத்திற்கு கோடிக்கணக்கான ரூபா ஒதுக்கப்பட்டுள்ள தருணத்தில் நாட்டில் வறுமை அதிகரித்து காணப்படுகின்றன. அரசாங்கத்திடம் தற்போது வறுமை குறித்த சரியான நிலைப்பாடொன்று இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மாத்தறை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடான சந்திப்பில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும்போதே சஜித் பிரேமதாச இவ்வாறு […]

​​”பிரஜாசக்தி” திட்டத்தின் தலைவர் பதவியில் JVP உறுப்பினர் நியமனம்: SLPP எதிர்ப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சாகர காரியவசம் அவர்கள், கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (2025.11.17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த அறிக்கையை வெளியிட்டார். ​ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் அவர்கள், அரசாங்க ஊழியர்கள் அனைவரையும் விஞ்சி, கிராமத்திற்கு எந்தவித சேவையும் செய்யாத ஜனதா விமுக்தி பெரமுனவின் (JVP) பலமான ஒரு உறுப்பினரை அரசாங்க நிதியில் கிராம அபிவிருத்தியை […]

​அக்வா பிளானட் ஸ்ரீ லங்கா 2025 சர்வதேசக் கண்காட்சி

எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ‘அக்வா பிளானட் ஸ்ரீ லங்கா 2025 சர்வதேசக் கண்காட்சி’ குறித்து ஊடகங்களை அறிவூட்டும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பானது இன்றைய தினம் கொழும்பில் உள்ள தாமரைக் கோபுர வரவேற்புத் தளத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பிற்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்கள் தலைமை தாங்கினார். ​இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் சந்திரசேகரன், இந்தக் கண்காட்சியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். ​”2025 ஆம் […]

உலக ஆணழகன் போட்டி: தமிழக வீரர் வெற்றி

உலக உடற்கட்டமைப்பு மற்றும் உடல் திறன் கூட்டமைப்பு சார்பில், 16ம் உலக ஆணழகன் போட்டி நவ., 11ல் துவங்கி நேற்று முடிந்தது. இந்தோனேஷியாவில் நடந்த இப்போட்டியில், உலகின் பல நாடுகளில் இருந்தும் நுாற்றுக்கணக்கான வீரர்கள் பங்கேற்றனர். ஒட்டுமொத்த ஆடவர் பிரிவில், 715 புள்ளிகள் பெற்று இந்திய அணி தங்கம் வென்றது. மகளிர் பிரிவில் 245 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தது. இதில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் மணி, ஒட்டுமொத்த சாம்பியன் பிரிவில், ‘மிஸ்டர் யுனிவர்ஸ்’ […]

தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் இன்று மிகக் கனமழை

  வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடையும் நிலையில், தமிழகம் நோக்கி நகரக்கூடும். இதனால், சென்னை, செங்கல்பட்டு உட்பட ஏழு மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கான, ‘ஆரஞ்ச் அலெர்ட்’ விடுக்கப்பட்டு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த மையத்தின் அறிக்கை: நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியில் 6 செ.மீ., மழை பெய்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோவில் 4; கடலுார் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் […]

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்; ஆளுங்கட்சி தலையீடு?

அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள தயாரிப்பாளர் சங்க தேர்தலில், அரசியல் தலையீடு ஏற்பட்டுள்ளதால், தயாரிப்பாளர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு, அடுத்தாண்டு பிப்ரவரி, 22ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன், தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தேர்தலை சந்திக்கும் தயாரிப்பாளர் சங்கத்தில், 1,300க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். தற்போதைய தலைவராக, ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ முரளி உள்ளார். விருப்பம் தமிழ்குமரன், […]