டொரொன்டோ, நவ. 25: கனடாவின் ஸ்கார்பரோ (Scarborough) பகுதியில் செவ்வாய்க்கிழமை (24) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கிய பெண் பாதசாரி ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை 5:30 மணியளவில் பிர்ச்மவுண்ட் வீதி (Birchmount Road) மற்றும் ஷெப்பர்ட் அவென்யூ கிழக்கு (Sheppard Avenue East) ஆகிய வீதிகளுக்கு அருகே விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தமக்குத் தகவல் கிடைத்ததாக டொரொன்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும் அவசர மருத்துவப் பணியாளர்களும், படுகாயமடைந்த நிலையில் இருந்த குறித்த பெண்ணை மீட்டுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர், உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவிற்கு (Trauma centre) கொண்டு செல்லப்பட்டதாக டொரொன்டோ அவசர மருத்துவப் பணியாளர்கள் சி.டி.வி (CTV) செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய வாகனம் சம்பவ இடத்திலேயே தரித்து நின்றதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். விபத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவராத நிலையில், பொலிஸார் அப்பகுதியின் வீதிகளை மூடி மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்