முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் வெகுவிரைவில் விடுவிக்கப்படும் எனப் பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இராணுவத்தின் வசமுள்ள தனியார் காணிகளும் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.