“அமைச்சர் ராஜ்மோகன் மீது வழக்குப்பதிய முன் அனுமதி வேண்டும்!” – ஆளுநருக்கு திமுக கடிதம்!

சென்னை:

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு ரூ.5 கோடி கொடுக்க ஒருவர் முன்வந்ததாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசிய விவகாரத்தில், அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிய முன் அனுமதி வழங்க வேண்டும் எனத் தமிழக ஆளுநருக்குத் திமுக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஆளுநருக்கு திமுக கடிதம்:

திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் பரந்தாமன் தமிழக ஆளுநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “கடந்த 1-ஆம் தேதி சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவில் பங்கேற்றுப் பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பொறுப்பிற்கு ரூ.5 கோடி கொடுக்க ஒருவர் முன்வந்ததாகவும், அவரைத் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவர் லயோலா மணி தன்னிடம் அழைத்து வந்ததாகவும் கூறினார்,” எனக் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, “அவர் மீது நடவடிக்கை எடுக்கத் திமுக சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்குப் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இந்தப் புகார் மனு மீது வழக்குப்பதியவில்லை. ராஜ்மோகன் அமைச்சராக இருப்பதால், அந்தப் புகார் மனு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஏதுவாக லஞ்ச ஒழிப்புச் சட்டம் 1988-ன்படி வழக்குத் தொடர முன் அனுமதி அளிக்க வேண்டும்,” என்று அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

இடைத்தரகரின் பங்கு குறித்து விசாரணை:

தொடர்ந்து அந்தக் கடிதத்தில் வழக்கறிஞர் பரந்தாமன், “ரூ.5 கோடி வழங்க முன்வந்ததாகக் கூறப்படும் நபரின் அடையாளம், இடைத்தரகரின் பங்கு ஆகியவற்றை விசாரிக்க வேண்டியது அவசியமாகும். இந்தப் புகார் மீதான விசாரணை முடிவடையும் வரை, இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிப்பது, முடிவெடுப்பது போன்றவற்றில் இருந்து அமைச்சர் ராஜ்மோகனை விலக்கி வைக்க வேண்டும். அமைச்சர் ராஜ்மோகன் தரப்பில் இருந்து எந்தவொரு தலையீடும், செல்வாக்கும் இல்லாத வகையில் தகுதிவாய்ந்த அதிகாரிகள் மூலம் இந்த விவகாரம் சுதந்திரமாகக் கையாளப்பட வேண்டும்,” என வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திரமான புலனாய்வை உறுதி செய்யக் கோரிக்கை:

மேலும் அக்கடிதத்தில், “அமைச்சரின் பேச்சு, பொது நிர்வாகத்தின் நேர்மை மற்றும் பொதுப் பதவிகளின் புனிதத்தன்மை தொடர்பானவை. இந்த விவகாரத்தில் சுதந்திரமான புலனாய்வு அவசியமாகும். எனவே, இந்த விவகாரம் சட்டப்பூர்வ மற்றும் அரசியலமைப்புத் தேவைகளுக்கு ஏற்ப நேர்மையாகவும், சுதந்திரமாகவும் கையாளப்படுவதை உறுதி செய்ய வேண்டும்,” என்று திமுக சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரிடம் ஏற்கனவே அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப் பதிவு செய்யப்படாத நிலையில், தற்போது ஆளுநரிடம் முன் அனுமதி கோரித் திமுக சட்டத்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள இந்தக் கடிதம் தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

#MinisterRajmohan #DMK #TNGovernor #PreventionOfCorruptionAct #Parandhaman #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive

IMG_2583

திருமண விளம்பரங்கள் குறித்து அரசாங்கம் அவதானம்!

November 24, 2026

சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகும் மூடநம்பிக்கை விளம்பரங்கள், சமூகத்தைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் உள்ளடக்கங்கள் மற்றும் வன்முறையை

IMG_2582

இலங்கை அகதிகள் உருக்கமான கோரிக்கை!

November 24, 2026

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது நாட்டைவிட்டு வெளியேறி, இந்தோனேசியாவில் கடந்த 15 ஆண்டுகளாகப் பல இன்னல்களுக்கு மத்தியில் தங்கவைக்கப்பட்டுள்ள

vikatan_2026-11-23_ubr0qbgo_New-Project-44

“அமைச்சர் ராஜ்மோகன் மீது வழக்குப்பதிய முன் அனுமதி வேண்டும்!” – ஆளுநருக்கு திமுக கடிதம்!

November 24, 2026

சென்னை: தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு ரூ.5 கோடி கொடுக்க ஒருவர் முன்வந்ததாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

pil

இரண்டு பிள்ளைகளுடன் உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்ட நபரால் பரபரப்பு

November 24, 2026

தமது இரண்டு குழந்தைகளுடன் மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திலிருந்து நபர் ஒருவர் வாவியில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்ட சம்பவத்தால்

tr

இந்து சமுத்திரத்தில் நிலத்திலநடுக்கம்

November 24, 2026

இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட 6.5 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ship

கடலில் பழுதடைந்த சரக்குக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டது

November 24, 2026

நடுக்கடலில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாகச் செயலிழந்த சரக்குக் கப்பல் ஒன்று, ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்துக்குப் பாதுகாப்பாகக் கொண்டுவரப்பட்டுள்ளது. சைப்ரஸ்

Seeman 12

“கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்க!” – சீமான் வலியுறுத்தல்!

November 24, 2026

சென்னை: கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து அவரை உடனடியாகக் கைது செய்ய

hika

ஈரானில் ஹிஜாப் அணியாமல் இசை நிகழ்ச்சி நடத்திய பாடகிக்கு 74 சவுக்கடிகள்’ –

November 24, 2026

கட்டாய ஹிஜாப் அணியாமல் இசை நிகழ்ச்சியில் பாடிய பிரபல ஈரானியப் பாடகி பரஸ்தூ அஹ்மதிக்கும், அவரது இசைக்குழு மற்றும் தயாரிப்புக்

RJ4ZVUFNM5EQJOHRURPXIMAGO4

பர்லிங்டன் தீ விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

November 24, 2026

பர்லிங்டன்: பர்லிங்டன் நகரில் உள்ள வீடொன்றில் கடந்த வார இறுதியில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச்

14

தையிட்டி சட்டவிரோத விகாரை காணிகளை மீளக் கையளிக்கக் கோரி போராட்டம்

November 24, 2026

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (24) இரண்டாவது

3LITMNYQBRGDFMXM4234BLNO5A

தொடர் பாலியல் தாக்குதல் சம்பவங்கள்: 91 வயது முதியவர் கைது

November 24, 2026

பர்லிங்டன் பகுதியில் ஐந்து மாத காலப்பகுதியில் இடம்பெற்ற ஐந்து தனித்தனி பாலியல் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக, 91 வயது முதியவர்

celll phone

தனது பழைய ஆரம்பப் பாடசாலையில் குழந்தையொன்றைக் கொல்லத் திட்டமிட்ட 14 வயது சிறுமி: இணையத் தீவிரவாதத்தால் மூளைச்சலவை செய்யப்பட்ட அதிர்ச்சித் தகவல்

November 24, 2026

வின்னிபெக் (கனடா): தான் முன்பு கல்வி கற்ற ஆரம்பப் பாடசாலையில் உள்ள மழலையர் வகுப்புக் குழந்தையொன்றை எவ்விதக் காரணமுமின்றிப் படுகொலை