விகாரை வளாகத்தில் சத்தியாகிரகத்தில் ஈடுபடுவோர் வௌியேற வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு!

அனுராதபுரம் – ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினரை குறித்த பகுதியில் உடனடியாக வெளியேறுமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் IX ஆம் அத்தியாயத்தின் 106 (1) ஆம் பிரிவின் கீழ் அவசர சந்தர்ப்பங்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தடுப்பதற்காக தற்காலிகமாகப் பிறப்பிக்கப்படும் கட்டளையாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் உதித நிசாந்த ஆகியோருடன் தங்கியுள்ள அனைத்துப் பௌத்த துறவிகளும் ஏனைய நபர்களும் அங்கு அமைத்துள்ள தற்காலிகக் கூடாரங்களை அகற்றிவிட்டு, இன்று பிற்பகல் 2 மணிக்கு முன்னர் புனிதப் பகுதி வளாகத்திலிருந்து வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த வளாகத்திலிருந்து அமைதியான முறையில் வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டபோதிலும், அவர்கள் வெளியேறாமல் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம் மற்றும் சத்தியாகிரகப் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும், ருவன்வெலிசாயவை வழிபட வரும் பக்தர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்படுவதாகவும் அனுராதபுரம் தலைமையகப் பொலிஸ் பரிசோதகரினால் நீதிமன்றத்தில் கருத்துக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

குறித்த நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, ருவன்வெலிசாய மற்றும் ஸ்ரீ மகா போதி உள்ளடங்கலாக முழுப் புனிதப் பகுதி வளாகத்திலிருந்தும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெளியேற வேண்டும்.

மேலும், புனிதப் பகுதியிலுள்ள தொல்பொருள் சின்னங்களுக்கு எவ்வித சேதமோ அல்லது அழிவோ ஏற்படுத்தக் கூடாது என்றும், அமைக்கப்பட்டுள்ள தற்காலிகக் கூடாரங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நீதிமன்றத்தினால் வேறு விதமான உத்தரவு பிறப்பிக்கப்படாத பட்சத்தில், இன்றைய தினம் முதல் 14 நாட்களுக்கு இந்த உத்தரவு அமுலில் இருக்கும் என நீதவான் தனது கட்டளையில் தெரிவித்துள்ளார்.

IVBPDJ25CJAGBHBQQL5PTIDS4E

எலிசபெத் பிரை மையத்தில் என்ன நடந்தது?

November 9, 2026

ஒன்ராறியோவின் பேரி (Barrie, Ont.) மேப்பிள் அவென்யூவில் (Maple Avenue) அமைந்துள்ள ‘எலிசபெத் பிரை சொசைட்டி’ (Elizabeth Fry Society)

toronto police233

மாகாணம் தழுவிய குழந்தைகள் பாலியல் சுரண்டல் விசாரணை: 17 பேரை கைது செய்தது OPP

November 9, 2026

குழந்தைகள் பாலியல் சுரண்டல் விசாரணை தொடர்பாகத் ரொறன்ரோவில் உள்ள மூவர் உட்பட 12 க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு

UG2VAOSV6FDDHCTQSEZV3YHIHM

கவர்தா லேக்ஸ் பகுதியில் கொடூர நாய் தாக்குதல்: பெண் ஒருவர் விமானம் மூலம் மருத்துவமனைக்கு மாற்றம்

November 9, 2026

கவர்தா லேக்ஸ் (Kawartha Lakes) பகுதியில் இரண்டு நாய்கள் தாக்கியதில் 50 விநாடிகளிலுள்ள பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், ரொறன்ரோ

8

“காவிரியின் குறுக்கே அணை கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்ததாக டி.கே.சிவக்குமார் கூறியிருப்பது மோசடி!” – வைகோ!

November 9, 2026

சென்னை: காவிரியின் குறுக்கே அணை கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததாகக் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கூறியிருப்பது அப்பட்டமான மோசடி

7

“தவெக ஆட்சி துன்பம் மிகுந்த ஆட்சி!” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

November 9, 2026

திருப்பூர்: தவெக ஆட்சியில் ஊழல், போதைப்பொருள் விற்பனை மற்றும் கொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகக் கூறி, தவெக ஆட்சி துன்பம் மிகுந்த

6

“மேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு உரிமையும் இல்லை, தகுதியும் இல்லை!” – அன்புமணி ராமதாஸ்!

November 9, 2026

சென்னை: மேகதாது அணை கட்டக் கர்நாடகத்திற்கு உரிமையும் இல்லை, தகுதியும் இல்லை எனப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆணித்தரமாகத்

5

“ஒரு மனித உயிருக்கு ரூ. 40 லட்சம்தான் மதிப்பா?” – பிரேமலதா விஜயகாந்த் கேள்வி!

November 9, 2026

சென்னை: கொலைக் குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு உடனடியாகச் செயல்பட வேண்டும் எனத்

4

“சென்னைக்கு 1,000 புதிய மின்சார ஏசி பேருந்துகள்!” – முதல்வர் விஜய் உத்தரவு!

November 9, 2026

சென்னை: சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு 1,000 புதிய குளிர்சாதன வசதி கொண்ட மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்ய முதலமைச்சர்

3

“தீபாவளி பண்டிகை முடிந்து ஊர் திரும்பும் விமான பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!” – பல மடங்கு கட்டணம் உயர்வு!

November 9, 2026

சென்னை: தீபாவளி பண்டிகை முடிந்து பொதுமக்கள் சென்னை திரும்பி வரும் நிலையில், உள்நாட்டு விமானங்களில் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளதால்

2

“மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் தெளிவுபடுத்த வேண்டும்!” – கிருஷ்ணசாமி வலியுறுத்தல்!

November 9, 2026

கோயம்புத்தூர்: மேகதாது அணை விவகாரத்தில் உண்மை நிலையை முதலமைச்சர் விஜய் உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும் எனப் புதிய தமிழகம் கட்சித்

1

“சாதாரண மனிதர்களும் மனசாட்சி உள்ளவர்களும் அரசியலில் பயணிக்க முடியாது!” – துரை வைகோ வேதனை!

November 9, 2026

தூத்துக்குடி: சாதாரண மனிதர்களும் மனசாட்சி உள்ளவர்களும் அரசியலில் பயணிக்க முடியாது என்றும், அரசியல்வாதிகளின் டிஎன்ஏ தனி என்றும் மதிமுக முதன்மைச்

(Zak Miller)

நலமடைந்து வருகிறார் பிரித்தானிய குத்துச்சண்டை வீரர்

November 9, 2026

பிரித்தானிய குத்துச்சண்டை வீரரான சாக் மில்லர் (Zak Miller), தனது போட்டியின் போது தலையில் ஏற்பட்ட பயங்கரமான காயம் காரணமாக