“மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் வழக்கை 9 மாதத்தில் முடிக்க மதுரை ஐகோர்ட் கெடு!”

மதுரை:

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கை ஒன்பது மாதத்தில் முடிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் அதிரடியாகக் கெடு விதித்துள்ளது.

கொலை வழக்கு:

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் காவலாளி அஜித்குமார். இவர் மீது நகை திருட்டு புகாரை மதுரையைச் சேர்ந்த பேராசிரியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் அளித்தார். அந்தப் புகாரின்பேரில் விசாரணை நடத்துவதற்காக அஜித்குமாரை அழைத்துச் சென்ற போலீசார் கடுமையாகத் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அஜித்குமார் பரிதாபமாக இறந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாகக் கொலை வழக்கில் தனிப்படை போலீசார் ஆறு பேரும், அப்போதைய மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் உள்பட நான்கு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கை சிபிஐ தீவிரமாக விசாரித்துக் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

ஐகோர்ட்டில் மனு:

இந்நிலையில், சண்முகசுந்தரம் உள்பட நான்கு அதிகாரிகளும் தங்களை நீதிமன்ற காவலில் வைக்கும்படி கீழ் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, அனைத்துத் தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்டு தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.

உத்தரவு சரிதான்:

இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி முருகன் நேற்று பிறப்பித்தார். அதில், “காவலாளி அஜித்குமார் இறந்த வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்போம் என மனுதாரர்கள் நான்கு பேரும் எழுதி கொடுத்த பத்திரத்தை, ஜாமீன் பத்திரத்திற்கு இணையாக ஒருபோதும் கருத முடியாது. மேலும் மனுதாரர்கள் அனைவரும் காவல்துறையினர் என்பதைக் கருத்தில் கொள்ளும்போது, அவர்கள் சாட்சிகளை மிரட்டுவதற்கோ அல்லது சாட்சியங்களைக் கலைப்பதற்கோ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே மனுதாரர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, அவர்களை விசாரணை கோர்ட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தது நூறு சதவீதம் சரிதான். அதிகாரங்களைப் பயன்படுத்தி மனுதாரர்களைச் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யும்படி கோர முடியாது. வேண்டுமானால் ஜாமீன் கேட்டு உரிய கோர்ட்டினை அவர்கள் நாடலாம்,” என்று நீதிபதி திட்டவட்டமாகத் தீர்ப்பளித்துள்ளார்.

#AjithkumarMurder #MaduraiHC #PoliceBrutality #CustodialDeath #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive

dsaf

ஆழ்கடலில் பிடிப்பட்ட போதைப்பொருள்

November 5, 2026

இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட மீன்பிடிப் படகில் காணப்பட்ட போதைப்பொருளின் அளவு 189 கிலோ கிராமிற்கும்

ci

காகிதங்கள் என்ற பெயரில் இறக்குமதி செய்யப்பட்ட பாரியளவான சிகரெட் தொகை பறிமுதல்

November 5, 2026

போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட, சுமார் 792 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய கொள்கலன்

bus

இலங்கை போக்குவரத்து சபையில் இயங்கக்கூடிய நிலையில் 5,000 மட்டுமே!

November 5, 2026

இலங்கை போக்குவரத்து சபையில் 7,130 பேருந்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

ran

Los Angeles நகர மேயராகும் தமிழ் பெண்!

November 5, 2026

அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த

7

“அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமானுக்கு ஆதரவு கிடையாது!” – டி.கே.எஸ்.இளங்கோவன்!

November 5, 2026

சென்னை: அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திமுக ஒருபோதும் ஆதரவு அளிக்காது என்று

6

“மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் வழக்கை 9 மாதத்தில் முடிக்க மதுரை ஐகோர்ட் கெடு!”

November 5, 2026

மதுரை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கை ஒன்பது மாதத்தில் முடிக்க வேண்டும்

5

“விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது அறிவிக்கப் போகிறார் முதல்-அமைச்சர்?” – உதயநிதி கேள்வி!

November 5, 2026

சென்னை: விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடியை முதலமைச்சர் விஜய் எப்போது அறிவிக்கப் போகிறார் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

4

“மக்களை அதிகாலையிலேயே திரையரங்குகளுக்கு அழைப்பது வெட்கக்கேடானது!” – சீமான் கடும் விமர்சனம்!

November 5, 2026

சென்னை: போதைக்கும் பொழுதுபோக்குக்கும் முன்னுரிமை கொடுத்து எந்தச் சமூகம் வாழ்ந்து வளர்ந்திருக்கிறது, இதுதான் தமிழகத்துக்கு நீங்கள் கொண்டுவருவதாகச் சொன்ன மாபெரும்

ravi33

வடபகுதி கடற்பரப்பு சட்டவிரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது – ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு; கடற்படையின் அலட்சியப்போக்கையும் கடுமையாக கண்டித்தார்

November 5, 2026

அத்துமீறி நுழையும் சட்டவிரோத இந்திய மீனவர்களாலும், உள்ளூர் சட்டவிரோத கடற்றொழிலாளர்களாலும் வடபகுதிக் கடற்பரப்பு முழுவதும் சட்டவிரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டதாகவும், நேர்மையான

canada immigr

2027 ஆம் ஆண்டில் குறைவான புலம்பெயர்வோரை வரவேற்கக் கனேடியர்கள் பெரும்பான்மையாக விருப்பம்: நானோஸ் (Nanos) ஆய்வு

November 5, 2026

புலம்பெயர்வு அளவுகளையும், வீட்டு வசதி, சேவைகள் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் அவற்றின் தாக்கத்தையும் நாடு தொடர்ந்து எதிர்கொண்டு வருவதால், அடுத்த

canada flag

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள் கனடியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், அமெரிக்கா மீதான நம்பிக்கை இன்னும் சந்தேகத்திற்குரியதாகவே உள்ளது

November 5, 2026

அமெரிக்க காங்கிரஸைக் (நாடாளுமன்றம்) ஜனநாயக கட்சியினர் முழுமையாகக் கைப்பற்றியதை பல கனேடியர்கள் வரவேற்றுள்ளனர்; இருப்பினும், தொடர்ந்து நடந்து வரும் வர்த்தகப்

google

இடைக்காலத் தேர்தல்களின் போது அதிகம் தேடப்பட்ட நாடாக கனடா திகழ்ந்துள்ளது: கூகுள் (Google)

November 5, 2026

கூகுள் டிரெண்ட்ஸ் (Google Trends) அறிக்கை ஒன்றின்படி, இடைக்காலத் தேர்தல்கள் குறித்து அமெரிக்காவை விட கனடாவில்தான் மற்றைய நாடுகளைக் காட்டிலும்