“அம்பை இடைத்தேர்தலில் சீமானுக்கு அதிமுக ஆதரவா?” – திண்டுக்கல் சீனிவாசன் கொடுத்த ‘அப்டேட்’!

மதுரை:

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் பொதுவேட்பாளராக சீமான் நிறுத்தப்பட்டால், அதிமுக ஆதரிக்குமா என்ற கேள்விக்கு அக்கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் சூசகமாகப் பதில் அளித்துள்ளார்.

தங்கக் கவசம் ஒப்படைப்பு:

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை விழா நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவரது நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த 13.5 கிலோ எடையுள்ள தங்கக் கவசம், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை அண்ணா நகரில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கியில் இன்று மீண்டும் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது. அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நினைவிடப் பொறுப்பாளர் காந்தி மீனா ஆகியோர் இந்தக் கவசத்தை வங்கியில் ஒப்படைத்தனர்.

தவெக மீது விமர்சனம்:

இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் ராஜன் செல்லப்பா ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர் ஆளுங்கட்சியான தவெக அரசைக் கடுமையாக விமர்சித்தார். “முதலமைச்சர் விஜய் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் நூறு கிலோமீட்டர் தூரம் ரோடு ஷோ சென்றாலும் வெற்றி கிடைக்காது. ஒரு பைசா கூடப் பணம் கொடுக்காமல் இடைத்தேர்தலில் அதிமுகதான் உறுதியாக வெற்றி பெறும். தாராபுரம், மதுராந்தகம் தேர்தல்களில் ஆளுங்கட்சியினர் டிபன் பாக்ஸில் வைத்து ஐநூறு ரூபாய் பணம் கொடுத்து வெற்றி பெற்றுள்ளனர். தவெக ஆட்சி அமைந்தவுடன் மக்களுக்கான வசதிகளை ஆறு மாதங்களில் பிரமாதமாகச் செய்து காட்டுவோம் என்று கூறினார்கள். ஆனால், அரிசி விலை உயர்வு உள்ளிட்ட விலைவாசி உயர்வால் மக்கள் தற்போது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வு, மின் தட்டுப்பாடு, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஆகியவற்றால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். முதலமைச்சர் விஜய் அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு முதலமைச்சராக இருப்பார் என்று அமைச்சர்கள் கூறுவது ஒரு பகல் கனவு. இந்த ஆட்சி ஐந்து ஆண்டுகள் கூட நீடிக்காது,” என்று அவர் கடுமையாகச் சாடினார்.

சீமானுக்கு ஆதரவா?:

தொடர்ந்து பேசிய அவர், “ஆளுங்கட்சிக்கு 35 சதவீத ஆதரவு மட்டுமே உள்ளது. ஆளுங்கட்சிக்கு எதிராக உள்ள மீதமுள்ள 65 சதவீத வாக்குகளை ஒருங்கிணைத்தால் வெற்றி பெற முடியும். அதற்கான வியூகத்தை அதிமுக பொதுச்செயலாளர் வகுப்பார்,\” என்றார். அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமானைப் பொதுவேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, \”திமுக எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதோ அதே போன்ற நிலைப்பாட்டில்தான் அதிமுகவும் உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அதுகுறித்து முடிவு செய்து பேசுவோம்,” என்று அவர் நாசுக்காகத் தெரிவித்தார். இவரது இந்தப் பேட்டி தற்போது அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

#DindigulSrinivasan #AIADMK #Seeman #Ambasamudram #TVK #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive

5

நிதியுதவிக்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம்

November 3, 2026

10 மில்லியன் யூரோ நிதியுதவிக்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் நிலைபேறான

mi

மின்னல் தொடர்பில் முன்னெச்சரிக்கை அறிவிப்பு!

November 3, 2026

இயற்கை பேரிடர்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை மத்திய நிலையத்தினால் நாட்டின் பல பிரதேசங்களுக்கு மின்னல் தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

gas

3 சமையல் எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடையும்!

November 3, 2026

2026 நவம்பர் மாதத்திற்குள் நாட்டுக்கு 3 சமையல் எரிவாயு கப்பல்களைக் கொண்டுவருவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம்

var

கைதான வருணி போகஹவத்தவுக்கு விளக்கமறியல்

November 3, 2026

கார் ஒன்றை கொள்வனவு செய்வதற்கும், அதன் தவணைக்கட்டணங்களைச் செலுத்துவதற்கும் பணம் கிடைத்த விதம் குறித்து உறுதிப்படுத்தத் தவறியமை தொடர்பில் கைது

rain1 (1)

“அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள்: புதிய வழிகாட்டுதல்கள் வெளியிட்ட தமிழக அரசு!”

November 3, 2026

சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டத்தை பெருமளவு உயர்த்தும் உயரிய நோக்கில், மாநிலம் முழுவதும் உள்ள

8

“வாழ்வதா? சாவதா? என்ற நிலைக்கு மக்களை தள்ளுவதுதான் ஆட்சியின் சாதனையா?” – வேல்முருகன் ஆவேசம்!

November 3, 2026

சென்னை: தமிழகத்தில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்து வருவதால் ஏழை

6

“குழப்பத்தில் உருவாகி, குழப்பத்திலேயே நாட்களைக் கடத்தும் தவெக ஆட்சியால் பாதிக்கப்படுவது மக்கள்தான்!” – எடப்பாடி பழனிசாமி!

November 3, 2026

சென்னை: குழப்பத்தில் உருவாகி, குழப்பத்திலேயே நாட்களைக் கடத்தும் தவெக ஆட்சியால் பாதிக்கப்படுவது மக்கள்தான் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

5

“தீபாவளிக்கு 5 நாட்கள் சுங்கக்கட்டணம் ரத்து செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை!”

November 3, 2026

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டுச் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை ஐந்து நாட்கள் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று விசிக

3

“சொத்துக் குவிப்பு வழக்கு!” – சி.விஜயபாஸ்கர், அவரது மனைவிக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன்!

November 3, 2026

சென்னை: வருமானத்திற்கு அதிகமாக ரூ.35.79 கோடி மதிப்புள்ள சொத்துகளைச் சேர்த்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்காக, முன்னாள் அமைச்சரும், தற்போதைய

4

“ஈரோட்டில் முதல்-அமைச்சர் விஜய் ரோடுஷோ!” – மலர்தூவி மக்கள் உற்சாக வரவேற்பு!

November 3, 2026

ஈரோடு: தமிழ்நாடு அரசின் மக்கள் நலத்திட்டங்களை முதலமைச்சர் விஜய் மக்களின் பயன்பாட்டுக்காக வழங்கி வரும் நிலையில், ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும்

2

“தரமற்ற வெங்காயம்; 400 மெட்ரிக் டன் கொள்முதல் ஆணை அதிரடி ரத்து!”

November 3, 2026

சென்னை: NAFED நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 400 மெட்ரிக் டன் வெங்காயக் கொள்முதல் ஆணையை ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூட்டுறவுத் துறை அதிகாரப்பூர்வமாக

1

“அம்பை இடைத்தேர்தலில் சீமானுக்கு அதிமுக ஆதரவா?” – திண்டுக்கல் சீனிவாசன் கொடுத்த ‘அப்டேட்’!

November 3, 2026

மதுரை: அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் பொதுவேட்பாளராக சீமான் நிறுத்தப்பட்டால், அதிமுக ஆதரிக்குமா என்ற கேள்விக்கு அக்கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் சூசகமாகப்