மட்டக்களப்பில் கொள்ளைச் சந்தேக நபர்களான தம்பதிகள் கொடுத்த மயக்க மருந்தால் வயோதிபப் பெண் உயிரிழப்பு!

மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு வந்த கணவன், மனைவியான சந்தேக நபர்கள் இருவரும் கொடுத்த மயக்க மருந்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்ட கல்லாற்றைச் சேர்ந்த வயோதிபப் பெண் (வயது 65) உயிரிழந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (29) இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவரின் உறவினர்கள் குறித்த மரணம் தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

கடந்த மார்ச் 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை நெல்லிக்காடு வயல் பகுதியில் பாழடைந்த கிணற்றில் உயிருடன் போராடிக்கொண்டிருந்த இளம் தாய் ஒருவர் மீட்கப்பட்டதுடன் அதே கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

அத்துடன் அருகில் உள்ள வயல் பகுதியில், காப்பாற்றப்பட்ட இளம் தாயின் 3 வயது 4 மாதங்களான பெண்குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்திலேயே வவுணதீவு பாவக்கொடிச்சேனையைச் சேர்ந்த இந்த கணவன், மனைவி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த சந்தேக நபர்கள் இருவரும் கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையத்துக்கு பிற்பகல் 1 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

அங்கு, வவுணதீவு பாவக்கொடிச்சேனையில் உள்ள தனது மகளை சந்திக்கச் செல்வதற்காக, பஸ் வண்டியை எதிர்பார்த்து, தனியாக காத்திருந்த வயோதிபப் பெண்ணிடம் மெல்ல பேசிக்கொண்டே, மயக்க மருந்து கலக்கப்பட்ட பழச்சாற்றை பருகக் கொடுத்துள்ளனர்.

சந்தேக நபர்களான கணவன், மனைவி இருவரும் வயோதிபப் பெண்ணின் அருகில் சென்று, “கவனம் அம்மா, இங்கே கள்ளர்கள் நடமாட்டம் அதிகம். கழுத்தில் இருக்கும் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு போய்விடுவார்கள்” என அறிவுரை கூறியுள்ளனர்.

இதையடுத்து, அந்த வயோதிபப் பெண், தனது கையில் இருந்த 2 பவுண் வளையல், கழுத்தில் அணிந்திருந்த 5 பவுண் தங்கச் சங்கிலியை கழற்றி தனது கைப்பையில் வைத்துள்ளார்.

அப்போது அந்தப் பெண்ணுக்கு, மயக்க மருந்து கலக்கப்பட்ட பழச்சாற்றை சந்தேக நபர்கள் பருகக் கொடுத்துள்ளனர். அவர் அதைக் குடித்து சிறிது நேரத்தில் மயக்கமுற்றதும், அவரது தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.

அதன் பிறகு, சுமார் 4 மணித்தியாலத்தின் பின்னர், குறித்த பெண் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

நீரிழிவு நோயாளியான அந்த வயோதிபப் பெண், அதன் பின்னர், மன, உடல் ரீதியாக நோய்வாய்ப்பட்டு, சிறுநீரகமும் பாதிக்கப்பட்டதன் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை (29) உயிரிழந்தார்.

சந்தேக நபர்கள் கொடுத்த மயக்க மருந்து காரணமாகவே அந்தப் பெண் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டி, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

rain

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!

November 1, 2026

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (1) பிற்பகல் 1

8

“வாய் மட்டும்தான் வேலை செய்யுது!” – ‘போக்கிரி’ பட வசனத்தைக் குறிப்பிட்டு இபிஎஸ் விமர்சனம்!

October 31, 2026

சென்னை: கோயம்புத்தூர் சிறையில் இருந்து கைதி தப்பியோடிய சம்பவம் குறித்துத் தவெக அரசையும் முதலமைச்சர் விஜய்யையும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி

7

“மின்தடை பிரச்சனைகளை சரிசெய்ய கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்படுவர்” – அமைச்சர் நிர்மல் குமார்!

October 31, 2026

மதுரை: தமிழகத்தில் மின்தடை மற்றும் மின்சாரம் தொடர்பான குறைபாடுகளை மிக விரைந்து முடிப்பதற்காகக் கூடுதல் பணியாளர்களை நியமிக்க உரிய நடவடிக்கை

6

“தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு: 3% அகவிலைப்படி உயர்வு!” – முதல்வர் விஜய் மாஸ் அறிவிப்பு!

October 31, 2026

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை மூன்று சதவீதம் உயர்த்தித் தமிழக முதலமைச்சர் விஜய் மாபெரும்

5

“தமிழர் ஒருவர் நிச்சயம் பிரதமர் ஆவார்” – அடித்துச் சொன்ன சி.பி.ராதாகிருஷ்ணன்!

October 31, 2026

மதுரை: குஜராத் மற்றும் கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் எல்லாம் நமது நாட்டின் பிரதமராக வரும்போது, எதிர்காலத்தில் தகுதியுள்ள

4

“தேர்தல் ஆணையருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் வி.சி.க. பங்கேற்கும்” – திருமாவளவன்!

October 31, 2026

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்

3

“பணியில் கவனக்குறைவாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை: சிறைத்துறை அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் எச்சரிக்கை!”

October 31, 2026

சென்னை: பணியில் மெத்தனமாகவோ அல்லது கவனக்குறைவாகவோ செயல்படும் சிறைத்துறை அதிகாரிகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை உறுதியாக மேற்கொள்ளப்படும் என்று

2

“கைதிகள் தப்பிய விவகாரம், மின்வெட்டுப் பிரச்சினை: அமைச்சர் நிர்மல் குமார் பதவி விலக வேண்டும்” – ஆர்.பி.உதயகுமார்!

October 31, 2026

சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, சிறைகளில் இருந்து கைதிகள் தப்பியோடிய அதிர்ச்சிச் சம்பவங்கள் மற்றும் தொடர்

1

“தவெக ஆட்சி மீது பெண்கள் பெரும் கோபம்” – மு.க.ஸ்டாலின்!

October 31, 2026

சென்னை: தமிழகத்தில் தவெக ஆட்சி மீது பெண்கள் பெரும் கோபத்தில் இருக்கின்றனர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுங்கட்சியை மிகக்

IMG_0928

வாட்ஸ்அப்பில் இலட்சக்கணக்கில் மோசடி: பெண் கைது

October 31, 2026

வாட்ஸ்அப் குழு மூலம் பரிசுப் பொதி தருவதாகக் கூறி இலட்சக்கணக்கில் பண மோசடி செய்த பெண் கைது! ​வாட்ஸ்அப் குழு

IMG_0927

மன்னாரில் உணவகத்தில் சோதனை ! காத்திருந்த அதிர்ச்சி!

October 31, 2026

மன்னார் நகரில் இயங்கி வந்த உணவகம் ஒன்றில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சோதனையில் பல்வேறு சுகாதாரக் குறைபாடுகள்

nay

சூப்பர் ஸ்டார் ‘தர்மன்’ படத்தில் நயன்தாரா?

October 31, 2026

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் ‘தர்மன்’ திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்திருப்பது தமிழ் சினிமா ரசிகர்களின்