திருநெல்வேலி:
ஊழல் கோப்புகள்:
தமிழக முதல்வரின் மேஜையில் உள்ள ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான 3 கோப்புகள் விரைவில் வெளியாகும் என்றார் நிதி, திட்டம்- வளர்ச்சித் துறை அமைச்சரும், மாவட்டப் பொறுப்பு அமைச்சருமான நெ.மரிய வில்சன். முதல்வரின் மேஜையில் உள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான 3 கோப்புகள் விரைவில் வெளியாகும். அதற்கான நடவடிக்கைகளை மக்கள் பார்ப்பார்கள் என்றார்.
மழை முன்னெச்சரிக்கை ஆய்வு:
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக திருநெல்வேலி வேய்ந்தான்குளம், குலவணிகர்புரம் உள்ளிட்ட இடங்களில் வியாழக்கிழமை ஆய்வு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் 4 நாள்களுக்கு முன்பு திடீரென பெய்த மழையை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஒரு மாதத்திற்கு முன்பு முதல்வர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் சென்னை மழை பாதிப்பில் இருந்து உடனடியாக மீட்கப்பட்டது.
மீட்புப் பணி ஏற்பாடுகள்:
இதேபோல் திருநெல்வேலி மாவட்டத்திலும் அதிக கனமழை பெய்தால் மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் பொறுப்பாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மணல் மூட்டைகள் உள்ளிட்ட மீட்புப் பொருள்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் 73 பாதிப்புக்குள்ளாகக்கூடிய இடங்களும், 7 மிகவும் பாதிக்கப்படக்கூடிய இடங்களும் கண்டறியப்பட்டுள்ளன. 5,466 தன்னார்வலர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்துத் துறையினரும் 100 சதவீதம் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளனர்.
கால்வாய் தூர்வாரும் பணிகள்:
தாமிரவருணி ஆற்றை ஒட்டிய பகுதிகளில் 53 கி.மீ. தொலைவுக்குக் கால்வாய் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் பாதாள சாக்கடைப் பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளன. மழை காரணமாக இப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஆறுகளைச் சுத்தப்படுத்தும் திட்டம்:
கூவம் ஆற்றை மீட்டெடுக்கும் பணிகளை மேற்கொள்ள முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதேபோல், தாமிரவருணி, வைகை, காவிரி ஆறுகளைச் சுத்தப்படுத்துவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
#MariaWilson #CorruptionFiles #TVK #Tirunelveli #TNPolitics #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive