சென்னை:
தவெகவை நம்பி வாக்களித்த பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என சென்னை மேயர் பிரியா திமுக மகளிர் அணி கூட்டத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
முப்பெரும் விழா:
சென்னை கிழக்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., கலாநிதி வீராசாமி, முன்னாள் எம்.பி. அப்துல்லா, சென்னை மேயர் பிரியா, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி:
நிகழ்ச்சியில் பேசிய மேயர் பிரியா, “பையன் விஜி, அண்ணன் விஜி என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் தற்போது 7, 8 வயது சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். அப்போது எங்க போனீர்கள்? சினிமாவில் வருவது போல கயிற்றில் தொங்கவிடுவார்கள் என நம்பி வாக்களித்த மக்களுக்குச் சிறிய பாதுகாப்பு கூட இல்லை. பெண்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க முடியாத அரசாக தவெக அரசு உள்ளது,” எனச் சாடினார்.
ரீல்ஸ் விவகாரம்:
மேலும், தவெக எம்.எல்.ஏ கீர்த்தனா ரீல்ஸ் போட்டு ஆட்சியைப் பிடித்தோம் எனத் தெரிவித்ததற்குக் பதிலளித்த அவர், “எங்களுக்கு ரீல்ஸ் போட வேண்டிய அவசியமில்லை. எங்களுக்குத் தலைவர், அக்கா, சின்னவர் இருக்கிறார்கள். எங்களுக்குக் கொள்கை இருக்கிறது,” எனப் பேசினார்.
#MayorPriya #DMK #TVKGovernment #WomenSafety #Chennai #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive