அமெரிக்காவால் இலங்கைக்கு எவ்வித அழுத்தங்களும் இல்லை​ – அமைச்சர் விஜித ஹேரத்

நாட்டின் இறையாண்மை மற்றும் அடையாளத்தைப் பாதுகாத்தே இலங்கை அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கின்றது என்றும், எந்தவொரு மனிதநேயத் தேவையின் போதும் பொருத்தமான முறையில் தலையிட அரசாங்கம் தயார் என்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் கடற்பரப்பிற்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ள ஈரானியக் கப்பல்கள் தொடர்பில் வெளியாகும் தகவல்கள் குறித்து விளக்கமளிக்கும் போதே, நேற்று(4) நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலை காரணமாகக் கப்பல் போக்குவரத்து சிக்கலாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இலங்கையைத் தவிர மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு அருகிலுள்ள சர்வதேசக் கடற்பரப்புகளிலும் இவ்வாறு கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு அருகிலுள்ள சர்வதேசக் கடற்பரப்பில் சுமார் 47 கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், அவை அண்மையில் வந்தவை அல்ல என்றும், நீண்டகாலமாகவே குறித்த சர்வதேசக் கடற்பரப்பில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

அந்தக் கப்பல்களில் 19 ஈரானியக் கப்பல்கள் அடங்குகின்ற போதிலும், அவை இலங்கையின் கடற்பரப்பிற்குள் நிறுத்தப்படவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

மேலும், குறித்த கப்பல்களுக்கு உணவு அல்லது நீரை வழங்குவதைத் தடுக்குமாறு அமெரிக்கா இலங்கைக்கு அறிவித்துள்ளதாகப் பரவி வரும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.

இலங்கை அரசாங்கத்திற்கு அவ்வாறான எந்தவொரு அழுத்தமோ, தலையீடோ அல்லது அறிவிப்போ அமெரிக்காவினால் விடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

எமது இறையாண்மை மற்றும் அடையாளத்தைப் பாதுகாத்தே நாங்கள் அனைத்துத் தீர்மானங்களையும் எடுக்கின்றோம். எனினும், மனிதநேயக் காரணங்களால் எமக்குத் தேவை ஏற்படும் பட்சத்தில், தேவையான தலையீட்டை நாங்களும் செய்வோம்.

அத்துடன் ‘IRIS Bushehr’ கப்பல் இன்னமும் திருகோணமலைத் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளதுடன், அதிலுள்ள 13 கடற்படையினருக்குத் தேவையான உணவு, தங்குமிடம் மற்றும் பாதுகாப்பை வழங்கி அந்தக் கப்பலைப் பாதுகாப்பாகப் பராமரிக்க இலங்கை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும், அமெரிக்காவினால் தடைகள் விதிக்கப்பட்டுள்ள கப்பல்களுக்குப் பொருட்களைக் கொண்டு செல்வதையோ அல்லது விநியோகங்களை வழங்குவதையோ இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என தெளிவுபடுத்திய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், இலங்கை எப்போதும் சர்வதேசக் கடல்சார் சட்டத்திற்கு அமையவே செயற்படுவதாகத் தெரிவித்தார்.

இலங்கை அமைந்துள்ள புவிசார் அரசியல் முக்கியத்துவம் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சொந்தமான பெருமளவிலான கப்பல்கள் தினமும் தீவிற்கு அருகில் பயணிப்பதால், ஒரு நாடாக இலங்கை தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அக்கப்பல்களுக்கு ஆதரவையும் வழிகாட்டலையும் வழங்கக் கடமைப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

6

“ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் விஜய் விருந்தளிக்கவுள்ளார்!” – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா முக்கிய அறிவிப்பு!

October 5, 2026

சென்னை: ஜப்பானில் நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அபாரமாகச் செயல்பட்டுப் பதக்கங்கள் வென்று தாயகம் திரும்பிய தமிழக விளையாட்டு

anojan

சவுதி சிறையில் அனோஜன் மீது தாக்குதல்

October 5, 2026

சவுதிஅரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராஜா அங்குள்ள சிறைச்சாலையில் வைத்து மோசமாக தாக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளதாக சிவில்

4

“அன்பு மற்றும் கருணையின் வடிவமாகத் திகழ்ந்த வள்ளலார் வழியில் பயணிப்போம்!” – வள்ளலார் பிறந்த நாளில் முதலமைச்சர் விஜய் புகழஞ்சலி!

October 5, 2026

சென்னை: வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் எனக் கூறிய அருட்பிரகாச வள்ளலாரின் 204 ஆவது பிறந்த நாள் (அவதார நாள்)

3

“எந்த துண்டுச் சீட்டுக்கும் அடிபணிபவன் நான் அல்ல!” – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிரடிப் பேட்டி!

October 5, 2026

திண்டுக்கல்: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகத் திண்டுக்கல் வருகை தந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் (சபாநாயகர்) ஜே.சி.டி. பிரபாகர், செய்தியாளர்களைச் சந்தித்துப்

2

“மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது!” – நாளை வாக்குப்பதிவு!

October 5, 2026

சென்னை: தமிழக அரசியல் களத்தில் தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம்

Mid photos new.00_02_08_02.Still117

“விவசாயிகள் கடனாளிகளாக வாழும் நிலை மாற வேண்டும்!” – இறுதிக்கட்டப் பிரசாரத்தில் சீமான் ஆவேசப் பேச்சு!

October 5, 2026

தமிழ்நாடு: விரைவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விவசாயிகள்

Shiranthi-Rajapaksa 1

கைதாவதை தவிர்ப்பதற்காக முன்பிணை மனுவை தாக்கல் செய்தார் சிராந்தி

October 5, 2026

முன்னாள் முதல் பெண்மணி சிராந்தி ராஜபக்ச தான் மீண்டும் இலங்கை திரும்பும்போது விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்படுவதை தவிர்ப்பதற்காக மாளிகாகந்த நீதவான்

836330168_2102335250490463_4547311295934819953_n

வவுனியா சமளங்குளம் கல்லுமலை பிள்ளையார் கோவிலின் பிரதேசத்திலும் பௌத்த வழிபாட்டுக்குத் திட்டம்!

October 5, 2026

வவுனியா சமளங்குளம் கல்லுமலை பிள்ளையார் கோவில் இருக்கும் பகுதியில் கல்கமுவ சந்தபோதி தேரர் தலைமையில் பௌத்த வழிபாடுகளை நடத்துவதற்கான கோரிக்கை

Chandra

யாழ்ப்பாண இளைஞர், யுவதிகளுக்கு அதிக தொழில் வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை – கடற்றொழில் அமைச்சர்

October 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழில் வாய்ப்பின்மையை குறைத்து, இளைஞர், யுவதிகளுக்கான அதிகளவிலான தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக

Shiranthi-Rajapaksa 1

நாடு திரும்பும்வேளை சிராந்தி விமானநிலையத்தில் கைதுசெய்யப்படலாம்

October 5, 2026

முன்னாள் முதல்பெண்மணி சிராந்தி ராஜபக்சகுறிப்பிட்ட காலத்திற்குள் நிதிகுற்றங்கள் தொடர்பான பொலிஸ் பிரிவில் ஆஜராகவிட்டால் அவர் பயணத்தடையை எதிர்கொள்ளநேரிடும் என பொதுமக்கள்

pta

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் – செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் விவாதம்

October 5, 2026

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை அரசாங்கம் புதிய வாசிப்பிற்காக செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது. செவ்வாய்கிழமை நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகும் வேளை

aus car

அவுஸ்திரேலியாவில் ரக்பி ரசிகர்கள் மத்தியில் காரை செலுத்திய இலங்கையை பூர்வீகமாக கொண்ட இளைஞர்- பத்து பேர் காயம்

October 5, 2026

அவுஸ்திரேலியாவின் நியுகாசிலில் ரக்பி லீக் ரசிகர்கள் மத்தியில் காரை செலுத்தி 3 சிறுவர்கள் உட்பட பத்துபேரை காயப்படுத்திய இலங்கையை பூர்வீகமாக