தாராபுரம்:
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் பி. சத்தியபாமா குறித்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்வைத்த விமர்சனங்களுக்கு முதலமைச்சர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடும் கண்டனம்:
நேற்று நடைபெற்ற பரப்புரையில் மு.க. ஸ்டாலின், வேட்பாளரின் உடல் அமைப்பு குறித்துத் தரக்குறைவாக விமர்சித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டுப் பெண்களின் மகனாகவும், அண்ணனாகவும், தம்பியாகவும் நின்று இந்தக் கண்டனத்தைப் பதிவு செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தக்க பதிலடி:
அக்டோபர் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் தாராபுரம் மக்கள் திமுகவிற்குத் தக்க பதிலடி கொடுப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தில் புகார்:
இதற்கிடையே, தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் இது தொடர்பாகப் புகார் அளித்துள்ளார். மு.க. ஸ்டாலினின் நட்சத்திரப் பேச்சாளர் அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
#CMVijay #MKStalin #Sathyabhama #Dharapuram #TNPolitics #TVK #DMK #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive