ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு தொடரும் விளக்கமறியல்!

 

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு கல்லடி பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம், காத்தான்குடியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் வவுணதீவு – கரையாக்கன்தீவு பகுதியில் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பிலேயே விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபராக பிள்ளையான் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார். அதேவேளை, காத்தான்குடியைச் சேர்ந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான மொஹமட் சிபான் மற்றும் மொஹமட் சகீத் ஆகிய இருவரையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்திருந்தனர்.

குறித்த ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். இதில், லண்டனில் வசித்து வருவதாகக் கூறப்படும் காத்தான்குடியைச் சேர்ந்த மொஹமட் பாய்ஸ் என்ற ‘பொலிஸ் பாய்ஸ்’ என்பவரும் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று திறந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மொஹமட் சிபான் மற்றும் மொஹமட் சகீத் ஆகிய இருவரும் நீதிமன்றில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். பிள்ளையான் காணொளி தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரித்த நீதவான், பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அத்துடன், தற்போது லண்டனில் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் சந்தேகநபரான மொஹமட் பாய்ஸுக்கு எதிராக மீண்டும் பிடியாணை பிறப்பித்தும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், மட்டக்களப்பில் இடம்பெற்ற குறித்த ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

IMG_8710

ஞானசார தேரரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு

September 29, 2026

கலகோட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.

IMG_8709

நாங்கள் எரிபொருள் விற்க முடியவில்லை என்றால் யாரும் விற்க முடியாது! ஈரான் எச்சரிக்கை

September 29, 2026

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இடம்பெற்று வரும் மோதலுக்கு மத்தியில், ஈரானின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாவிட்டால் பிராந்தியத்தில்

IMG_8708

மில்லியன் ரூபாய் நிதி மோசடி வழக்கு: உதய கம்மன்பிலவுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

September 29, 2026

அவுஸ்திரேலிய தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனப் பங்குகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி 21 மில்லியன் ரூபாயை மோசடி செய்ததாகச் சுமத்தப்பட்ட

IMG_8707

புதிய சீனத் தூதர் அமைச்சர் சந்தன அபேரத்னுடன் உத்தியோகபூர்வ சந்திப்பு!

September 29, 2026

இலங்கைக்கான புதிய சீனத் தூதர் வேய் ஹுவாஷியாங் (Wei Huaxiang) மற்றும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

IMG_8706

காலனித்துவ காலத்தில் வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட தொல்பொருட்களை மீண்டும் நாட்டிற்கு கொண்டுவர விசேட குழு நியமனம்!

September 29, 2026

காலனித்துவ ஆட்சிக் காலத்தில் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட கலாசாரச் சொத்துக்கள் மற்றும் தொல்பொருட்களை மீண்டும் முறைப்படி

IMG_8705

ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு தொடரும் விளக்கமறியல்!

September 29, 2026

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும்

trump carney 1

கனடா ‘ஐயா, எங்களை மன்னியுங்கள்’ என்று கூறி சில வாரங்களில் வர்த்தக ஒப்பந்தத்தைக் கேட்கும் என்று டிரம்ப் எதிர்பார்க்கிறார்

September 29, 2026

குறிப்பிட்ட கனடியப் பொருட்களுக்கான இறக்குமதித் தடைகள் அமலுக்கு வரச் சில மணிநேரங்களுக்கு முன்பாக, வரவிருக்கும் வாரங்களில் கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தைச்

canada export

அமெரிக்கா – கனடா இடையே வர்த்தக மோதல் அதிகரிப்பு: புதிய இறக்குமதித் தடைகள் அமலுக்கு வந்தன

September 29, 2026

1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கனடிய இறக்குமதிகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது அமலுக்கு வருகிறது. ஏற்கனவே பதற்றமாக இருக்கும்

Sri Lanka's President Ranil Wickremesinghe (L) along with country's former President Gotabaya Rajapaksa attend the annual Buddhist Navam procession at the Gangaramaya Temple in Colombo on February 5, 2023. (Photo by Ishara S. KODIKARA / AFP) (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

எனக்கு நினைவில்லை”: கீத் நொயார் கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்படுதல் குறித்து கோட்டாபய

September 29, 2026

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டது தொடர்பான விவரங்களோ, அல்லது தான் பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது இச்சம்பவம் குறித்து யாரேனும் தன்னைத்

images (42)

“முதலமைச்சர் விஜய் இனி எனக்கு அன்புத் தம்பி!” – தாராபுரம் பிரச்சார களத்தில் கனிமொழி எம்.பி சரமாரி விமர்சனம்!

September 29, 2026

தாராபுரம்: தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக எம்.பி கனிமொழி, முதலமைச்சர் விஜய்யைச் சரமாரியாக விமர்சித்துப் பேசியுள்ளார். அன்புத் தம்பி:

whatsapp-image-202-2026-09-16-14-53-49

“தாய்மாமன் தங்க மோதிரம் வெறும் பரிசல்ல; அது அன்பின் அடையாளம்!” – எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் நெகிழ்ச்சி!

September 29, 2026

சென்னை: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் வெறும்

1200-675-26426217-thumbnail-16x9-admksaidapet (3)

“முதலமைச்சர் விஜய் என்ன சாதித்துவிட்டார்? ஒரு தேசிய விருது கூட வாங்கியதில்லையே!” – எடப்பாடி சரமாரித் தாக்கு!

September 29, 2026

திருப்பூர்: தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், முதலமைச்சர் விஜய்யை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். என்ன சாதித்துவிட்டார்?: தாராபுரத்தில்