சென்னை:
மீண்டும் போட்டியிடும் வேட்பாளர்களின் மீது வெறுப்போ எதிர்ப்போ இருந்தால் மக்கள் நிச்சயம் அவர்களுக்கான தீர்ப்பைத் தருவார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை தாம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கமான தொழிலாளர் விடுதலை முன்னணி சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய விசிக தலைவர் திருமாவளவன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தொழிலாளர் கோரிக்கைகள்:
“போக்குவரத்துத் தொழிலாளர்களை நிரந்தர அரசு ஊழியராக்கிட வேண்டும் என விசிக அரசைத் தொடர்ந்து வலியுறுத்தும். ஆளும் கூட்டணியில் அங்கம் வகிப்பதால் தொழிலாளர்களின் கோரிக்கைகளை என்றைக்கும் விசிக ஒருபோதும் விட்டுக்கொடுக்காது.
இடைத்தேர்தல் மக்கள் எதிர்ப்பு:
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிடும் வேட்பாளர்கள் மீது வெறுப்போ எதிர்ப்போ இருந்தால் மக்கள் நிச்சயம் அவர்களுக்கான தீர்ப்பைத் தருவார்கள். தேர்தல் வரை அதற்கு நாம் பொறுமையாக இருந்து பார்ப்போம்.
சோபா விமர்சனம்:
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி எங்களை சோபா விமர்சனம் செய்ததாக நான் எண்ணவில்லை. அதிமுகவில் அப்போது பிரச்சினைகள் இருந்ததால் அவர்களை விமர்சித்ததாகவே நான் எண்ணுகிறேன். ஆனால் அதன்பிறகு அந்த சோபா விமர்சனம் மக்களால் புறந்தள்ளப்பட்டுவிட்டது.
போலி நம்பர் பிளேட் சர்ச்சை:
சமூக நீதியின் சகாப்தம் நிகழ்ச்சியில் பார்வையாளராகவே கலந்துகொண்டேன். வாசலில் இருந்து என்னை அவர்களின் ஜாகுவார் காரில் அழைத்துச் சென்றனர். அப்போது காரின் பதிவு எண்ணை நான் கவனிக்கவில்லை. ஆனால் ஊடகங்களில் வந்த பிறகுதான் எனக்கு இதுபோல் ஒளிப்பதிவு செய்திருந்தார்கள் எனத் தெரியவருகிறது. அது சினிமா படப்பிடிப்பு தளம் என்பதால் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன. நான் ஒரு பார்வையாளராகத்தான் அங்குச் சென்றேன்\” என்று திருமாவளவன் விளக்கமளித்தார்.
#Thirumavalavan #VCK #ByElection2026 #FakeNumberPlate #UdhayanidhiStalin #Tambaram #TransportWorkers #TNPolitics #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive