ர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இங்கிலாந்தின் அதிவேகப் பந்துவீச்சாளர்களிலொருவரான மார்க் வூட் ஓய்வு பெற்றுள்ளார்.
இதுவரையில் 38 டெஸ்ட்களில் 119 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 36 வயதான வூட், 2015ஆம் ஆண்டில் ஆஷஸைக் கைப்பற்றியதோடு, 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தையும் கைப்பற்றியிருந்தார்.
2022 இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத்தை வென்ற வூட், 70 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 80 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, 38 இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் 54 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.
கடந்த 2015ஆம் ஆண்டு அறிமுகத்தை மேற்கொண்ட வூட் தொடர்ச்சியாக முழங்கால் காயங்களால் அவதிப்பட்டு இறுதியாக கடந்தாண்டு நவம்பரிலேயே இங்கிலாந்துக்காக விளையாடியிருந்தார்.