ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தற்காலத்தில் பரவி வரும் செய்திகள் தொடர்பில் விளக்கமளிக்கும் விஷேட ஊடக சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொள்ளும் இவ்விஷேட ஊடக சந்திப்பு நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவட்ட செயலாளர் எம். எம். ஏ. காதர் அறிவித்துள்ளார்.