இதேவேளை, ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேன தொடர்பான வழக்கில் பிணை நின்றவர்கள் என்ற வகையில் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால், அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கி அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோருக்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
தாயாரின் இறுதிச் சடங்கு காரணத்தினாலேயே டி சில்வாவினால் நீதிமன்றத்திற்கு வருகை தர முடியவில்லை.
இந்த வழக்கில் டி சில்வா சந்தேகநபர் அல்ல என்றும், அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி பிடியாணையை திரும்பப் பெறுமாறு கோர முடியும் என்றும் இந்த விவகாரம் குறித்து நன்கு அறிந்த சட்டத்தரணி ஒருவர் நியூஸ்வயர் செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார்.
பிணை நின்றவர் என்ற வகையில் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமைக்காகவே இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், சாதாரண நீதிமன்ற நடைமுறைகளின் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் அந்தச் சட்டத்தரணி கூறினார்.
முன்னர் சந்திரசேனவுக்கு பிணை வழங்கப்பட்ட போது, டி சில்வாவும் அவரது மனைவியும் பிணை நின்றிருந்தனர்.
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் எயார்பஸ் விமானக் கொள்வனவு ஒப்பந்தங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பான விசாரணைகளுடன் இந்த நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்புடையவை ஆகும்.
இந்தப் பிடியாணையானது பிணை நின்றவர் என்ற வகையில் அவர் நீதிமன்றத்திற்கு வராதது தொடர்பானது மட்டுமே தவிர, எயார்பஸ் விசாரணையில் அவர் ஒரு சந்தேகநபர் என்பதைக் குறிக்கவில்லை.