முன்னாள் முதல்பெண்மணி சிராந்தி ராஜபக்ச நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த போதிலும் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார் என தெரிவிக்கப்படுவதை அவரது குடும்ப உறுப்பினர்கள் நிராகரித்துள்ளனர்.
சிராந்தி ராஜபக்ச புதன்கிழமை அதிகாலை மருத்துவகிசிச்சைக்காக சிங்கப்பூர் பயணமாகியுள்ள நிலையில் இது குறித்து அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ள விடயங்களை ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
பண்டாரநாயக்க விமானநிலையத்திற்கு வந்த பின்னரே சிராந்தி ராஜபக்சவிற்கு அழைப்பாணை கிடைத்தது, அதுவரை அழைப்பாணை கிடைக்கவில்லை.
அவர் மருத்துவமனையிலிருந்து நேரடியாக விமானநிலையம் சென்றார்.அதிகாலை 12.50க்கு சிங்கப்பூர் விமானம் புறப்படவிருந்தது,அவ்வேளை விமானநிலைய அதிகாரியொருவர் திடீர் என நிதிக்குற்ற விசாரணை பிரிவின் அழைப்பாணையை அவரிடம் கையளித்தார்.
அதுவரையில் அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கோரும் எந்த அழைப்பாணையையும் நிதிக்குற்ற விசாரணை பிரிவினர் அனுப்பிவைக்கவில்லைஎன சிராந்தியின் குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.