நாங்கள் நாட்டிற்காக பாடுபட்டவர்கள் நாங்கள் அச்சமடைந்து தப்பியோட மாட்டோம் என பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மேல்நீதிமன்றத்தில் நேற்று ஆஜரான வேளை ஞானசார தேரர் ஊடகவியலாளர்களுக்குஇதனை தெரிவித்தார்.
உயர்நீதிமன்றம் எனக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இரத்து செய்த பின்னர் நான் தலைமறைவாகயிருக்கின்றேன் என சில ஊடகங்களும் சமூக ஊடகங்களும் தெரிவித்தன.
பலவீனமானவர்களே தப்பியோடி தலைமறைவாக வாழ்வார்கள்நாங்கள் நாட்டிற்காக பாடுபட்டவர்கள் அதற்கான விளைவுகளை எதிர்கொள்கின்றோம்நாங்கள் அச்சமடையவில்லை நாங்கள் தப்பியோடமாட்டோம் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயார் என ஞானசார தேரர் .தெரிவித்தார்.