ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களை கொள்வனவு செய்வதில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பில் பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அறிவுத்தலின் பேரில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவை தொடர்ந்து நாமல்ராஜபக்ச சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.
சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தற்போது நடைபெற்றுவரும் வழக்கில்நாமல்ராஜபக்ச சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார் என கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
எயார்பஸ் விமானக்கொள்வனவுடன் தொடர்புடைய இலஞ்ச பெற்ற குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்ச கைதுசெய்யப்பட்டு செப்டம்பர் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் மற்றும் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் இடம்பெற்றுவரும் கூட்டு விசாரணைகள் அடிப்படையில் நாமல்ராஜபக்சவை சந்தேகநபராக சேர்ப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.