திருநெல்வேலி:
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினருக்குப் பேச அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், துண்டுச் சீட்டு மூலம் வந்த உத்தரவுக்கே சபாநாயகர் அடிபணிந்தார் என்ற திமுகவினரின் குற்றச்சாட்டுக்குச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் அளித்த விளக்கத்தின் முக்கிய விவரங்கள்:
-
துண்டுச் சீட்டு சர்ச்சை: எனக்கு வழங்கப்பட்ட துண்டுச் சீட்டு, எனது துறை சார்ந்த குறிப்புகளை என் குழுவினரிடம் பெறுவதற்காகக் கொடுக்கப்பட்டதே தவிர, வேறு எந்த உத்தரவும் அதில் இல்லை. எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் பயப்படுபவனோ, அடிபணிபவனோ நான் அல்ல.
-
அமளியின் நோக்கம்: காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான முதலமைச்சர் விஜய்யின் பதிலுரையைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் எதிர்க்கட்சியினர் பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் நான் எந்த அழுத்தத்திற்கும் அடிபணியவில்லை.
-
வாய்ப்பு மறுக்கப்படவில்லை: எதிர்க்கட்சியினருக்கு நான் பேச வாய்ப்பை மறுக்கவில்லை; நேரலையைப் பார்த்தவர்களுக்கு அது நன்றாகவே தெரியும். வாய்ப்பளித்த பிறகும் அவர்கள் ஏன் பேசவில்லை என்பதற்கான விளக்கத்தை நான் எப்படி அவர்களிடம் கேட்க முடியும்?
-
வெளியேற்றுவது நோக்கமல்ல: பேரவையிலிருந்து எந்தவொரு உறுப்பினரையும் வெளியேற்ற வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டு உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டால், அதற்காக வருத்தப்படக்கூடிய இடத்தில்தான் நான் இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
Hashtags:
#SpeakerJCDPrabhakar #TNLegislativeAssembly #CMVijay #DMK #TVKGovt #TNPolitics #Tirunelveli #TamilNaduNews #TamilNews #BreakingNewsTamil