செம்மணி மனித புதைகுழி விடயத்தில் சர்வதேச நிபுணத்துவத்தை பெறுவது குறித்து ஆராய்ந்துவருவதாக காணாமல்போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைவர் மகேஸ்கட்டுலந்த தெரிவித்துள்ளதாவது
சர்வதேச நிபுணத்துவத்தை பெற்றுக்கொள்வது குறித்து ஆராயப்படுகின்ற போதிலும் இதுவரை இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் எதிலும் நாங்கள் ஈடுபடவில்லை உறுதியான நடவடிக்கைகள் எவற்றையும் நாங்கள் எடுக்கவில்லை.இதுவரையில் எங்கள் செயற்பாடுகள் நியாயாதிக்க வரம்பிற்குள் உட்பட்டவையாகவே காணப்படுகின்றன.
நாங்கள் தற்போது மாதிரி சேகரிப்பினை மாத்திரம் முன்னெடுத்துவருகின்றோம்.செம்
மின்னசொட்டா நெறிமுறை போன்ற சர்வதேச நெறிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான ஐநாவின் பரிந்துரை குறித்து பரிசீலிக்கப்பட்ட போதிலும் மேம்பட்ட தடயவியல் உள்கட்டமைப்புகளை கொண்ட நாடுகளுடன் கலந்தாலோசிப்பதற்கான எந்தவொரு பேச்சுவார்த்தைகளும் தற்போது இடம்பெறவில்லை.
நீதித்துறையிடமிருந்து வெளிப்படையான அறிவுறுத்தல்கள் கிடைக்காமல் காணாமல்போனோர் அலுவலகத்தினால் தன்னிச்சையாக வெளிநாட்டு உதவிகளை கோரவோ பெறவோ முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.