நாட்டின் ஜனநாயக அமைப்பையும் எதிர்கட்சிகளையும் அரசாங்கம் ஒடுக்க முயல்வதாக முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.
ஐக்கியதேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீகோத்தாவில் இடம்பெற்ற கட்சியின் 80வருடநிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
அரசாங்கம் தற்போது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மருத்துவர்கள் பௌத்தமதகுருமார்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் அரசியல் கட்சிகளை துன்புறுத்தி கட்டுப்பாடுகளை விதிக்கின்றது.
போதிய ஆதாரங்கள் இல்லாத போதிலும் அரசியல்வாதிகள் கைதுசெய்யப்படுகின்றனர்,இது ஜனநாயகத்தை எதிர்கட்சியை சுதந்திர தொழிற்சங்கங்களை ஒடுக்குகின்ற ஒரு முயற்சியாகும்.
நாட்டின் ஜனநாயக அமைப்பையும் எதிர்கட்சிகளையும் அழிப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன,22வது திருத்தம் தொடர்பில் சர்வஜனவாக்கெடுப்பு அவசியம் என்ற ஏற்பாட்டினை அரசாங்கம் சேர்க்காததால் அதனை எதிர்த்தோம்,22வது திருத்தத்தின் சட்டபூர்வதன்மையை உறுதிசெய்ய நீதிமன்றத்தின் ஊடாக கட்சி சர்வஜனவாக்கெடுப்பை கோருகின்றது.
நாடு நாடாளுமன்றத்திலிருந்தா பெலவத்தையிலிருந்தா ஆட்சி செய்யப்படுகின்றது என முன்னாள் ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்