கிளிநொச்சி பளைப் பகுதியில் சனிக்கிழமை (22.08.2026) மாலை நடந்த மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இரு மோட்டார்ச் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்துச் சம்பவம் நடந்துள்ளது. பளையில் வசித்து வந்த வடமராட்சி வட அல்வாய் நக்கீரன் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் சகீன் (வயது- 18) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.