சென்னை
எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கும் தவெக அரசின் முடிவைக் கடுமையாக விமர்சித்துள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், தற்போதைய அரசை “வண்டி ஓட்டக் கற்றுக்கொள்ளும் மலைப்பாதை டிரைவர்” என ஒப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
துரைமுருகன் அறிக்கையின் அதிரடி அம்சங்கள்:
-
அரசியலில் மக்கள் பார்வை (Optics) முக்கியம்: ஒரு திட்டம் எவ்வளவு முக்கியமானது என்பதை விட, மக்கள் அதை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதே அரசியலில் மிக முக்கியம். இதை உணராமல், ரூ.15,000 கோடி மானியக் கோரிக்கைகளை இருட்டடிப்பு செய்துவிட்டு, வெறும் ரூ.150 கோடி கார் விவகாரத்தை அரசு தானாகவே பெரிய சர்ச்சையாக்கிவிட்டது.
-
நிர்வாக முதிர்ச்சியின்மை: வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்குக் கார் இருக்கும்போது எம்.எல்.ஏ.க்களுக்குக் கார் கேட்பது தவறான கோரிக்கை அல்ல. ஆனால், தாங்கள் என்ன செய்தாலும் மக்கள் ரசிப்பார்கள் என்ற மமதையிலும், அதிகாரிகளின் சரியான ஆலோசனை இல்லாமலும் மிகச் சாதாரணமான ஒரு விஷயத்தை தவெக அரசு தவறாகக் கையாண்டுள்ளது.
-
திமுகவாக இருந்தால் எப்படிச் செய்திருக்கும்?: திமுகவாக இருந்தால் நேரடியாக எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்காமல், மாவட்ட நிர்வாகத்திற்குப் புதிய வாகனங்களை வழங்கி, அதன்பின் எம்.எல்.ஏ.க்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்து தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்த்திருக்கும்.
-
மலைப்பாதை டிரைவர்: “ஓட்டத் தெரியாத ஒரு டிரைவரை நம்பி, செங்குத்தான மலைப்பாதையில் விரைந்து சென்றுகொண்டிருந்த ஒரு பேருந்தை ஒப்படைத்திருக்கிறோம். வளர்ச்சிப் பாதையில் ஏறுவது கடினம், ஆனால் இறங்குவது மிகச் சுலபம்; நாம் தற்போது வேகமாக இறங்கிக்கொண்டிருக்கிறோம்” எனத் தவெக அரசின் நிர்வாக அனுபவமின்மையைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
#Duraimurugan #DMK #ChiefMinisterVijay #JosephVijay #TVKGovernment #MLACarScheme #TNAssembly #TamilNaduNews #ChennaiNews #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates