யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது 10 என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன. 8 என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டது.
இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 582 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 573 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வின்போது இடுப்பில் கட்டும் தாயத்து ஒன்றும், நாணயக் குற்றிகள், இரும்புத் துண்டுகளின் பகுதிகள் உள்ளிட்ட மூன்று சான்றுப் பொருட்கள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை மொத்தமாக 169 சான்றுப் பொருட்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.