இந்தோனேசியாவின் மத்திய தீவுக் கூட்டத்துக்கு அருகில் நேற்று ஏற்பட்ட பூமியதிர்ச்சி அனர்த்தம் காரணமாக 20 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை 7.7 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டதில் கட்டடங்கள், வீடுகளும் சேதமடைந்து, அவற்றின் இடிபாடுகளுக்குள் சிக்கியதில் இந்த மரணங்கள் சம்பவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தின் தீவிரத்தைத் தொடர்ந்து, இந்தோனேசியாவின் கடலோரப் பகுதிகளுக்கு உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.