செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி வேண்டி, “நீதியின் ஓலம் – 2” நிகழ்வுகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வை தாயகச் செயலணி ஏற்பாடு செய்துள்ளது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பெருமளவான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும், தமிழ் இனவழிப்பை வெளிப்படுத்தும் சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் ஒழுங்கமைக்கப்பட்டு, தாயகச் செயலணி உறுப்பினர்களால் இந்நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.