காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் மரபணு மாதிரிகளோடு ஒப்பிட்டு செம்மணி என்புகளை ஆய்வு செய்யுங்கள்!

செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்படுகின்ற எலும்புக்கூடுகளின் தரவுகளோடு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மரபணு மாதிரிகளை ஒப்பிட்டு ஆய்வு செய்யவேண்டிய சட்டத் தேவைப்பாடு இருப்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களின் மரபணுக்களை அவர்களின் ஒப்புதலுடன் சேகரித்து, அவற்றை பன்னாட்டு மேற்பார்வையுடன் பாதுகாக்கின்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றில் இன்று (5) உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சபையில் அவர் மேலும் கூறுகையில்,

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வுப் பணிகள் ஒகஸ்ட் 4ஆம் திகதி நேற்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுகளில் இதுவரை மொத்தம் 483 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 481 மனித எலும்புக்கூடுகள் இதுவரை முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

எனவே வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஒப்புதலுடன் அவர்களின் மரபணுக்களைச் சேகரித்து, அவற்றை பன்னாட்டு மேற்பார்வையுடன் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

மனிதப் புதைகுழி விடயத்தில் அடையாளம் காணப்பட்ட எலும்புத்தொகுதிகளை நிலத்திலிருந்து அகழ்ந்தெடுப்பது என்பது முதற்கட்ட செயற்பாடாகும்.

அதன் பிற்பாடு என்புமாதிரிகளை அறிவியல்பூர்வமாக ஆய்வுசெய்வது இரண்டாவது நடவடிக்கையாகும். அதனைத் தொடர்ந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட என்புத்தொகுதிகளின் கால எல்லை தொடர்பில் தொல்லியல் திணைக்களம் அறிவியல் அறிக்கை ஒன்றினை சமர்ப்பிப்பார்கள்.

மூன்றாவது கட்டமாகவே காணாமல்போன உறவுகள் தொடர்பான தேடுதல் விவகாரங்கள் ஆரம்பமாகும்.

யாராவது தங்களுடைய உறவினர்கள் குறிப்பிட்ட காலத்தில் காணாமல்போனதாகவோ அல்லது கைதுசெய்யப்பட்டதன் பிற்பாடு இருப்பிடம் தெரியவில்லை என்றோ முறைப்பாடு வழங்கியிருந்தால், தொல்லியல் திணைக்களம் கணித்துள்ள காலப்பகுதியோடு அந்தத் தரவுகளை ஒப்பிட்டு பாதிக்கப்பட்ட உறவுகளின் மரபணு மாதிரிகளை ஆய்வு செய்யவேண்டிய சட்டத் தேவைப்பாடு உள்ளது.

ஆனால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மரபணுக்களைச் சேகரித்து அதனைப் பாதுகாக்கும் காப்பகம் எதுவும் இதுவரை உருவாக்கப்படாத நிலையே காணப்படுகிறது.

எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் மரபணுக்களை அவர்களின் ஒப்புதலுடன் சேகரித்து, அவற்றை பன்னாட்டு மேற்பார்வையுடன் பாதுகாக்கின்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.

மனிதப் புதைகுழி அகழ்வாய்வுகளில் பங்கேற்கின்ற சட்டத்தரணிகளில் ஒருவரான ரனித்தா ஞானராசா அவர்களும் அண்மையில் இதுதொடர்பில் வலியுறுத்தியிருக்கிறார்.

எனவே இதுதொடர்பிலும் கவனம் செலுத்தப்படவேண்டும் என இந்த உயரிய சபையைக் கோருகின்றேன் என்றார்.

dailythanthi_2026-10-09_2ehwx7wk_shivan (1)

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!” – 4 மாத ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என அமைச்சர்கள் பெருமிதம்!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வீழ்த்தி த.வெ.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

images (1)

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

October 9, 2026

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள்

hindutamil_import_hindu_uploads_news_2023_07_22_xlarge_1061734

“மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு!” – வெளியே தெரிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நந்தி சிலை!

October 9, 2026

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

vikatan_2024-10-04_jsw1i91t_WhatsApp-Image-2023-12-26-at-1.12.38-PM

“சாலைகளில் ரத்த ஆறு ஓடுகிறது… விஜய் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!” – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: முதல்-அமைச்சர் விஜய் ஆட்சியில் கடந்த ஐந்து மாதங்களாகச் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2

“நிரந்தர முதல்-அமைச்சராக விஜய் இருப்பார்!” – அமைச்சர் என்.ஆனந்த் அதிரடிப் பேச்சு!

October 9, 2026

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மண்டல மாநாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்

parliment

உயர் நீதிமன்றத் தீர்மானம் அறிவிப்பு!

October 9, 2026

நச்சுக்கள், அபின்கள் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் இரண்டு திருத்தச் சட்டமூலங்களையும் சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என

thu

சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற பெயரில் புத்தசாசனத்தின் கௌரவத்தைச் சீர்குலைக்க முடியாது!

October 9, 2026

சிறைச்சாலையிலுள்ள கலபொடஅத்தே ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சம்பவமானது மிகவும் பாரதூரமானது என ‘தேசத்தைக் காக்கும்

kal

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!

October 9, 2026

களுத்துறை, நாகொட பகுதியில் உணவகம் ஒன்றில் இன்று (9) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில்

images - 2026-10-09T112650.899

“மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக தொடர்ந்து முன்னிலை!” – வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு

October 9, 2026

தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று

tvkmadhuranthagam-down-28521791085533

“மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல் முடிவுகள் – 11 மணி நிலவரம்!” – தவெக வேட்பாளர்கள் முன்னிலை!

October 9, 2026

சென்னை: தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக

6fe740e3-d63a-4122-8ada-4e8754dc10ee

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்ற சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் “Peace Summit & Conference 2026”

October 9, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் ஏற்பாட்டில் “Peace Summit & Conference 2026” சர்வதேச மாநாடு

gs

கிராமத்திற்குள்ளேயே பொருளாதார வாய்ப்பு; 1,540 கிராம உத்தியோகத்தர்களுக்கு நியமனங்கள்

October 9, 2026

தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் சமூகப் பயணமானது கிராமிய மக்களை நகரங்களுக்கு அழைத்து வராமல், கிராமத்திற்குள்ளேயே பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி,