மஹர சிறைச்சாலை வளாகத்தில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, அதனைச் சுற்றியுள்ள 03 கிராம அலுவலர் பிரிவுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இராகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 246 கெண்டலியத்த வீதி மேற்கு பகுதி, 246 சி கெண்டலியத்த வீதி வடக்கு பகுதி, 181 ஜி — தம்புவ பகுதி ஆகிய 03 கிராம அலுவலர் பிரிவுகளிலேயே விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது.