ஹால்டன் பிராந்திய பொலிஸ் வரலாற்றிலேயே மிகப்பெரிய மனித கடத்தல் (Human trafficking) விசாரணை தொடர்பான முடிவுகள் இன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளன.
‘புராஜெக்ட் ட்ரூபடோர்’ (Project Troubadour) எனப் பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கை 10 மாதங்களாக பல அதிகார வரம்புகளுக்கு உட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டதாகவும், இதன் மூலம் பல கைதுகள் செய்யப்பட்டுள்ளதுடன் பல குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதிப் பொலிஸ் அதிபர் ஜெஃப் ஹில் (Jeff Hill) மற்றும் சுப்பிரண்டன்ட் டேவ் கொஸ்டான்டினி (Dave Costantini) ஆகியோர் ஒன்டாரியோவின் ஓக்வில்லில் (Oakville, Ont.) காலை 10:30 மணிக்கு நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் இந்த விசாரணை குறித்த தகவல்களை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.