‘கொட்டுக்காளி’, ‘இட்லிக்கடை’ ஆகிய படங்களின் மூலம் பிரபலமான குழந்தை நட்சத்திரம் தீஹான் முதன்மையான தேடத்தில் நடித்திருக்கும் ஃப்ளாக் – Flag திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் எஸ். பி. பொன் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஃப்ளாக்- Flag திரைப்படத்தில் தீஹான், மிக்கி மக்கி ஜா, அபினவ் கோஸ்வாமி, ஆனந்த், பப்புஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எஸ். பி. பொன் சங்கர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராஜா ரவிவர்மா மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். தேச ஒற்றுமையை வலியுறுத்தி குழந்தைகளுக்கான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஐ & ஐ மூவிஸ் நிறுவனம் சார்பில் வை. வைரபிரகாஷ் தயாரித்திருக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” பத்து வயது சிறுவன் -அவனுடைய அப்பப்பாவின் அரவணைப்பில் வளர்கிறான். நெருக்கடியான சூழலில் அவன் தமிழகத்திலிருந்து புது டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறான். வழி தெரியாமல் இந்தியா முழுவதும் பயணிக்கும் அவன் புதுடெல்லிக்கு எதற்காக சென்றான்? என்பதுதான் படத்தின் கதை” என்றார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்… எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 14-ஆம் திகதி முதல் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தேசியக்கொடி தொடர்பான படைப்பு என்பதால் தேசிய அளவில் இப்படத்திற்கான கவனயீர்ப்பு கிடைத்திருக்கிறது.