ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் மண்டலத்தில் உள்ள ஹெல்மெட் உற்பத்தித் தொழிற்சாலை ஒன்றில் செவ்வாய்க்கிழமை (21) அன்று காலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
கட்டுவான கைத்தொழில் தோட்டத்திற்குள் அமைந்துள்ள இத்தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான தீவிர முயற்சிகளில் தீயணைப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் மற்றும் தீ விபத்துக்கான காரணங்கள் குறித்த மேலதிகத் தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.