டக்கு ஒன்டாரியோ (Northern Ontario) முழுவதும் தற்போது சுமார் 200 காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன, அவற்றில் 57 கட்டுப்பாட்டை மீறி எரிந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுக்கிறது.
இவற்றில் பெரும்பாலான தீ வடமேற்குப் பிராந்தியத்திலேயே எரிந்து கொண்டிருக்கின்றன.
அதிகரித்து வரும் காட்டுத்தீயின் தாக்கம் மற்றும் மோசமடைந்து வரும் புகையின் நிலைமை எதிர்காலத்திலும் தொடரக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ள நிலையில், வடக்கு ஒன்டாரியோ சமூகங்கள் மேலும் மக்களை வெளியேற்றுவதற்குத் தயாராகி வருகின்றன.
தண்டர் பே (Thunder Bay) பகுதியில் விடுதி அறைகளுக்குப் தட்டுப்பாடு நிலவுவதால், நெஸ்காந்தா எஸ்கிமோ மக்கள் பிரிவு (Neskantaga First Nation) இன்றைக்கு மற்றொரு வெளியேற்ற விமானத்தை திட்டமிட்டுள்ளது, இதில் வெளியேற்றப்படுபவர்கள் ரொறன்ரோவிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
வொயிட்வாட்டர் லேக் முதன்மை மக்கள் பிரிவு (Whitewater Lake First Nation), வீடுகள், உடமைகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் உட்படப் பரவலான அழிவுகள் ஏற்பட்டுள்ளதாகப் பதிவிட்டுள்ளது, இது தொலைதூரச் சமூகங்களிடையே கவலையையும் இழப்பையும் ஆழப்படுத்தியுள்ளது.
நெஸ்காந்தாவில் காட்டுத்தீ ஆபத்து மற்றும் வானிலை நிலைமைகள் காரணமாக, சமூகத்தின் தலைவரும் சபை உறுப்பினர்களும் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்து, ஜூலை 18 சனிக்கிழமை அன்று நெஸ்காந்தா மக்கள் விமானம் மூலம் தண்டர் பேக்கு வந்து சேர்ந்தனர்.
வடமேற்கு பிராந்தியம் முழுவதும் மறு அறிவித்தல் வரை வரையறுக்கப்பட்ட தீ மண்டலங்கள் மற்றும் திறந்தவெளித் தீத்தடைகள் அமலில் உள்ள நிலையில், மக்களின் உயிர்கள், சொத்துக்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளுக்கே முதன்மை முன்னுரிமை அளிக்கப்படும் என்று மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் பெய்த மழை சில தீப்பிழம்புகளின் வேகத்தைக் குறைத்துள்ளது, ஆனால் புகைமூட்டம், தடைப்பட்ட விநியோகங்கள் மற்றும் நெருங்கி வரும் காட்டுத்தீயைக் கண்காணித்து வரும் மக்களுக்குத் தொடர்ச்சியான கனமழை தேவைப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.