சென்னை:
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற கலைஞர் கணினி கல்வியகம் மற்றும் மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தின் சான்றிதழ் வழங்கும் விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்குச் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் இருந்தார். விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ், திமுக தேர்தல் அரசியலுக்காக மட்டுமே தொடங்கப்பட்ட கட்சி அல்ல என்றும், சமூக சேவைக்காக உருவான இயக்கம் என்றும் கூறினார். கீழ் நிலையில் உள்ள மக்களை மேல்நிலைக்குக் கொண்டுவருவதே அதன் முதன்மை நோக்கம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், \”திமுக ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அது தமிழ்நாட்டின் நலனுக்காகவே பாடுபடும். ஆளுங்கட்சியாக இருக்கும்போது அதனுடன் அட்டையாக ஒட்டிக்கொள்பவன் நான் அல்ல; என்னை திமுகவின் கட்டப்பா என்று கூட சொல்லிக்கொள்ளுங்கள்\” என்று தெரிவித்தார். மேலும், மு.க.ஸ்டாலின் ஆட்சியில்தான் தமிழ்நாடு அனைத்துத்துறைகளிலும் முதன்மை மாநிலமாக உருவானதாகக் குறிப்பிட்ட அவர், திமுக வகுத்த பாதையில் செல்வதுதான் நாட்டுக்கு நல்லது என்றும் குறிப்பிட்டார். இன்றைய அரசியல் நிலவரங்கள் குறித்தும், மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்தும் அவர் வெளிப்படையாகப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
#ActorSathyaraj #DMK #MaSubramanian #Saidapet #TamilNaduPolitics #DravidianMovement #PoliticalSpeech #BreakingNews #BMNews #TamilNews #LatestUpdate #PublicEvent #SocialService #PoliticalStance #TamilNaduNews #Governance #CurrentAffairs #ActorTalk #PoliticalViews #StatePolitics