டிஜிட்டல் திரை பிரபலமான நடிகர் பாரத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் வெளியீட்டு திகதி குறித்த பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் நிரஞ்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தில் பாரத், சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், ஆர். சுந்தர்ராஜன், ‘ஆதித்யா’ கதிர், சிபி சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஓம் நாராயண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரணவ் முனிராஜ் இசையமைத்திருக்கிறார். ரொமாண்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்குவாட் – தி ரூட் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் – ஜெகதீஷ் பழனிச்சாமி மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில்… இத்திரைப்படம் எதிர்வரும் ஓக்டோபர் மாதம் முதல் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழு வெளியிட்ட காணொளி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.