மாகாண சபைத்தேர்தலை வலியுறுத்தி ஆறுகட்சிகளுடன் இணைந்து செயற்பாடு; அதிகாரங்களை மீளப் பெறுவதற்கு எதிராக கூட்டுச்செயற்பாடு: தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சந்திப்பில் தீர்மானம்

மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்ச்சியாக தாமதிக்கப்பட்டு வருகின்மையை தீவிரமாக கவனத்தில் கொண்டு  பொது தளத்தில் இணைந்துள்ள தமிழ், முஸ்லிம், மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஆறு அரசியல் கட்சிகளுடன் இணைந்து விசேட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சியும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் தீர்மானித்துள்ளன.

அத்துடன், மாகாணங்களுக்கான அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்பெறுவதற்கு எதிராக அரச அதிகாரிகளையும், பொதுமக்களையும் தெளிவுபடுத்தும் முகமாக விசேட விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் இரு தரப்பினரும் முடிவெடுத்துள்ளனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞனத்தின் அலுவலகத்தில் முற்பகல் 10மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 12 மணி வரையில் நடைபெற்றிருந்தது.

இந்தச் சந்திப்பில் தமிழரசுக்கட்சியின் சார்பில் சி.வி.கே.சிவஞானம், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், ஆகியோரும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் நாகலிங்கம் இட்ணலிங்கம் தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், முருகேசு சந்திரகுமார், வேந்தன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இந்தச் சந்திப்பு தொடர்பில் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,

சுதந்திர இலங்கையில் அதிகாரங்களை பகிர்ந்து வாழ்வதற்கு விலக்கப்பட்டதன் காரணத்தால் தான் தனிநாடு என்ற கோரிக்கை எழுந்தது. ஆகவே பிளவுபடாத நாட்டுக்குள் அதியுச்ச அதிகாரப்பகிர்வு மீளப்பெறாதவகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது மிக அடிப்படையான கோரிக்கையாக உள்ளது. அந்தவகையில் அதிகாரப்பகிர்வு தொடர்பிலான விடயங்களை அடுத்த தலைமுறையினருக்கும் கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கும் எடுத்துரைப்பதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளோம்.

தற்போதைய நிலையில் கல்வி, சுகதாரம் என்பன மாகாணங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களாகும். காணி,பொலிஸ் ஆகிய அதிகாரங்களைக் கோரும் நாங்கள் வழங்கப்பட்ட அதிகாரங்களை மீண்டும் மத்திய அரசாங்கம் எடுத்துக்கொள்வதற்கு துணைபோக முடியாது.

குறிப்பாக தேசிய பாடசாலை தேசிய வைத்தியசாலை என்ற போர்வையில் அதிகாரங்கள் மீளப் பெறப்படுவதற்கு துணைபோக முடியாது. அதிகாரங்கள் பற்றிய விளக்கமில்லாது தேசிய பாடசாலையாக இருந்தால், தேசிய வைத்திய சாலையாக இருந்தால் எமக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்று நினைத்து செயற்படுபவர்களுக்கு உரிய விளக்கங்களை வழங்க வேண்டியுள்ளது.

அந்தவகையில், நீண்டகாலப் போராட்டத்தின் அடிப்படையில் எமக்கு கிடைத்த மிகச்சிறிய அதிகாரங்களையும் மீண்டும் மத்தி பெற்றுக்கொள்வதற்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் எவரும் துணைபோகக் கூடாது என்பதை பகிரங்கக் கோரிக்கையாக முன்வைக்கின்றோம்.

அதேநேரம் ஆறுகட்சிகள் தற்போது ஒன்றிணைந்துள்ள. அந்த தளமானது, நாட்டின் மொத்த சனத்தொககையில் 25சதவீதமான மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்க்கட்சிகளின் பொதுத்தளமாகும். அந்த தளமானது மக்களது விடயங்களில் இணங்கும் விடயங்களை ஒன்றிணைந்து முன்னெடுப்பதற்கானதாகும்.

அதனடிப்படையில், புதிய அரசியலமைப்பு, காணிப்பிரச்சினை, மாகாண சபைத்தேர்தல் விடயங்களை குறித்த கூட்டணி முன்னெடுப்பதற்கு இணங்கியுள்ள நிலையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியுடனான சந்திப்பில் குறித்த ஆறுகட்சிகள் ஒன்றிணைந்த தளத்தைப் பயன்படுத்தி அவ்விடயங்களை கொழும்பில் உள்ள இந்தியா உள்ளிட்ட இராஜதந்திரிகளை சந்தித்து எடுத்துரைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அவ்விடயங்களை ஆறுகட்சிகளின் கூட்டுத்தளத்தில் அதனை வெளிப்படுத்தவுள்ளேன்.

இதேநேரம் நானும், சாணக்கியனும் தொல்பொருளியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தை சந்தித்து உரையாடியுள்ளோம். அந்தவகையில் அவர் யாழ்ப்பாணத்துக்கான விஜயம் செய்து மந்திரிமனை உள்ளிட்ட விடயங்களை பார்வையிட்டுள்ளார். மந்திரிமனை தொடர்பில் சில இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டுள்ளன.

அதேபோன்று குருந்தூர் மலை விவகாரம் உள்ளிட்ட விடயங்களும் உரையாடப்பட்டுள்ளன. குருந்தூர் மலை விடயத்தில் வழங்கப்பட்டுள்ள நீதிமன்றக் கட்டளையும் அவரிடத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. ஆகவே தொல்லியல் திணைக்களத்தை மையப்படுத்தி எமது நிலங்கள் அபகரிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்தச் சந்திப்பு தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத்தலைவரும் ஊடகப்பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,

தமிழ் மக்களின் நீண்டகாலப் போராட்டத்தின் பலனாக 13ஆவது திருத்தச்சட்டத்திற்குள் சில அதிகாரங்கள் கிடைத்துள்ளன. அவை பற்றாக்குறையாக இருந்தாலும் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில் மாகாணங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீண்டும் மத்திய அரசாங்கத்துக்கு வழங்கும் செயற்பாடுகளுக்கு துணைபோகக்கூடாது என்று சகலருக்கும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

மன்னார் மாவட்ட வைத்தியசாலை, தெல்லிப்பளை வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளை மத்தியிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கருத்தாடல்கள் இடம்பெற்றுள்ளன. அவை அரசியலமைப்புக்கு எதிரான செயற்பாடுகளாகும். அதேபோன்று தேசிய பாடசாலையின் பெயரால் பாடசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் அவ்வாறான அதிகாரம் இல்லை என்று சொல்லப்பட்டுள்ளது.

அத்தோடு தேசிய பாடசாலைகளின் பெயரால் கையகப்படுத்தப்பட்ட பாடசாலைகள் எவையும் அவ்விதமான வகைக்குள் இன்னமும் உள்வாங்கப்படவில்லை.அவற்றை மாகாணம் கையாள்வதற்கான சுற்றிக்கை வெளியிடப்படும் என்ற அறிவிப்பும் செய்யப்பட்டுள்ளது. அதனை எதிர்பார்த்துள்ளோம்.

அவ்விதமான நிலையில் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் என்று எவரும் அதிகாரங்கள் மீள மத்திக்குச் செல்வதற்கு அனுமதியளிக்கக்கூடாது என்பது எமது கோரிக்கையாகும்.

தற்போது ஆறுகட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. அந்த அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கவில்லை. மாறாக பொதுவான விடயங்களின் ஒன்றிணைந்து செயற்பாடவே எதிர்பார்த்துள்ளன. அதனை நாங்கள் வரவேற்றுள்ளோம். அந்தவகையில் அதிகாரங்கள் மீளப்பெறப்படுத்தல், ஆளுநரின் அதிகாரங்கள், மாகாண சபைத்தேர்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இராஜதந்திரிகளுக்கு தொடர்ச்சியான எடுத்துரைப்புக்களைச் செய்வதற்கு குறித்த கட்டமைப்பு செயற்படவுள்ளது.

மேலும் ஆறுகட்சிகள் கூட்டணியானது, செயற்படுத்தக்கூடிய விடயங்களையே முன்னெடுக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது என்றார்.

கேள்வி: ஆறுகட்சிகளின் இணைவு சம்பந்தமாக விமர்சனங்கள் வெளிவந்துள்ளனவே?

சுமந்திரன்: கட்சிகள் கூட்டாகச் செயற்படத் தீர்மானத்தாலும் கேள்விகள் உள்ளன. தனியாகச் செயற்பட்டாலும் கூட்டாகச் செயற்படவில்லை என்ற கேள்விகள் உள்ளன. எவ்வாறாக இருந்தாலும், பொதுமக்களின் விடயங்களில் இணங்கிச் செயற்படக்கூடிய விடயங்கள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது

dailythanthi_2026-09-12_o3yec9f7_Chennai-mayor

“என் தலைவரைச் சீண்டினால் யாராக இருந்தாலும் விடமாட்டோம்!” – முதலமைச்சர் விஜய்க்கு மேயர் பிரியா ஆவேச எச்சரிக்கை

September 12, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மிசா சட்டம் மற்றும் மு.க. ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதைக் கண்டித்து, சென்னையில் நடைபெற்ற திமுக

1693_12_3_2021_19_53_17_1_MALLAI_SATHYA_MDMK_MADURANTAGAM

இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: திராவிட வெற்றிக் கழகத் தலைவர் மல்லை சத்யா அறிவிப்பு!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாகத் திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா

13

“ப்யூஸ் போன தவெக அரசு”: மின்வெட்டு மற்றும் ஆவின் பால் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் பால் தட்டுப்பாடு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், மக்களைத்

vanniyarasu (1)

“சமூகநீதி குறித்துத் திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

September 12, 2026

சென்னை: சமூகநீதி விவகாரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க எவருக்கும் தகுதி இல்லை எனச்

1200-675-27618532-thumbnail-16x9-kovai-bus

கோவையில் அதிர்ச்சி: அரசுப் பேருந்தின் தானியங்கி கதவில் சிக்கிய மூதாட்டி – ரத்தம் வழிந்ததால் பயணிகள் கொந்தளிப்பு!

September 12, 2026

கோயம்புத்தூர்: கோவையில் பயணிகள் முழுமையாக ஏறுவதற்குள் அரசுப் பேருந்தின் தானியங்கி கதவு திடீரென மூடப்பட்டதில், மூதாட்டி ஒருவரின் முகம் கதவில்

1200-675-26640765-thumbnail-16x9-shanmugam (1)

இடைத்தேர்தலில் சிபிஎம் யாருக்கு ஆதரவு? நாளை திருச்சியில் முடிவு – பெ.சண்முகம்!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து நாளை திருச்சியில்

27617897_a

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிப் போராட்டம் – 50-க்கும் மேற்பட்டோர் கைது!

September 12, 2026

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை நீதிமன்ற உத்தரவின்படி தமிழிலும் சமமாக நடத்த வலியுறுத்தி, தடையை மீறிப் போராட்டத்தில்

ctr-2025-12-22-14-41-49

தமிழகத்தில் திடீர் மின்வெட்டுக்கு என்ன காரணம்? – மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் தொடர் மின்தடைக்கான காரணங்களை விளக்கி மின்துறை

1291252

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா? – ‘துக்ளக் தர்பார்’ முடிவைக் கைவிடச் சீமான் கடும் கண்டனம்!

September 12, 2026

சென்னை: ரூ. 1,200 கோடியில் சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட

solomon-pappaiah

பட்டிமன்ற பிதாமகனின் சகாப்தம் நிறைவு: முழு அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!

September 12, 2026

மதுரை: மறைந்த மூத்த தமிழறிஞரும், புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் (90) உடல், மதுரை தத்தனேரி மின்

minister-vinoth (1)

ஆய்வுக் கூட்டத்துக்குச் செல்லும் வழியில் மனிதநேயம்: விபத்தில் சிக்கியவர்களை மீட்ட அமைச்சர் வினோத்!

September 12, 2026

கும்பகோணம்: கும்பகோணம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடியவர்களுக்கு, அவ்வழியாகச் சென்ற

9712_1_9_2026_12_31_11_2__DSC4468

திருச்சி முக்கியக் கோயில்களில் செல்போன் பாதுகாப்புக்கான கட்டணம் ரத்து: பக்தர்களுக்கு இலவச வசதி!

September 12, 2026

திருச்சி: திருச்சியில் உள்ள 5 பிரதான கோயில்களில் பக்தர்களின் செல்போன்களைப் பாதுகாப்பு அறையில் வைப்பதற்காக வசூலிக்கப்பட்டு வந்த கட்டண முறை