பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் முதலாவது கூட்டம்

இலங்கை – தென்னாப்பிரிக்கா பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவின் முதலாவது கூட்டம் குறித்த சங்கத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தென்னாபிரிக்காவின் இலங்கைக்கான தென்னாபிரிக்க பிரதி உயர்ஸ்தானிகரும் அரசியல் ஆலோசகருமான இந்தெபிசெங் ரமஷிலா, இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளையும் பாராளுமன்ற ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதற்கான தென்னாப்பிரிக்காவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

வரவேற்புரையாற்றிய சங்கத்தின் தலைவர் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள், பாராளுமன்ற நட்புறவுச் சங்கங்கள் பாராளுமன்ற இராஜதந்திரத்தின் ஊடாக இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் முக்கியமான கருவியாக விளங்குகின்றன என்று தெரிவித்தார்.

இவை, இரு நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கருத்து, அனுபவ மற்றும் சிறந்த நடைமுறைப் பரிமாற்றங்களுக்கும், இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்குமான அரிய வாய்ப்பை வழங்குகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டம் பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – தென்னாப்பிரிக்கா பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் செயற்பாடுகளின் ஆரம்பத்தை குறிக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளதாகவும், 1994 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டதிலிருந்து, ஜனநாயகம், சமாதானம், பரஸ்பர மரியாதை மற்றும் நிலையான அபிவிருத்தி ஆகிய பொதுவான விழுமியங்களின் அடிப்படையில் வளர்ந்து வரும் நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதில் இச்சங்கம் முக்கிய பங்காற்றும் என்றும் தெரிவித்தார்.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான தொடர்ச்சியான உரையாடல்களையும் மக்களுக்கிடையிலான தொடர்புகளையும் ஊக்குவிப்பதன் மூலம் பாராளுமன்ற மற்றும் இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் அவசியத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர். அரசியல் தீர்மானமெடுக்கும் செயல்முறைகளில் பெண்களின் பங்கேற்பையும் தலைமைத்துவத்தையும் அதிகரிக்கும் நோக்கில், இரு நாடுகளின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பும் கலந்துரையாடலின் முக்கிய அம்சமாக அமைந்தது. விவசாயம், சுரங்கத் தொழில், சுற்றுலாத்துறை, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, உற்பத்தித் துறை உள்ளிட்ட பல துறைகளில் இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கான கணிசமான வாய்ப்புகள் உள்ளதாக உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். மேலும், எக்ஸ்போ 2027 வர்த்தகக் கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்க வர்த்தக பிரதிநிதிக் குழுவொன்றை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான விருப்பத்தையும் தென்னாப்பிரிக்கத் தரப்பினர் முன்வைத்தனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால விளையாட்டு உறவுகளை கருத்திற்கொண்டு, கிரிக்கெட் மற்றும் ரக்பி ஊடாக விளையாட்டு அடிப்படையிலான இராஜதந்திரத்தை மேம்படுத்துவது தொடர்பாக உறுப்பினர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். பல்கலைக்கழக கூட்டாண்மைகள், புலமைப்பரிசில் வாய்ப்புகள் மற்றும் கல்வி பரிமாற்றத் திட்டங்கள் உள்ளிட்ட கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டன.

இலங்கையின் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவாக, நல்லிணக்கம் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புதல் தொடர்பான தென்னாப்பிரிக்காவின் அனுபவங்களையும் கற்றுக்கொண்ட பாடங்களையும் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாக தென்னாப்பிரிக்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, இலங்கை தென்னாபிரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளர் ​ெபாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ நன்றியுரையாற்றினார்.

srilanka un peace keeping

ஹெய்ட்டிக்கு படையினரை அனுப்புவதற்கு முன்னர் அவர்களின் கடந்காலங்கள் குறித்து நன்கு ஆராய்ந்தோம் – இராணுவ பேச்சாளர்

September 14, 2026

ஹைட்டி நாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் இயங்கும் வன்முறைக் கும்பல் தடுப்புப் படையில் (GSF) இலங்கை அமைதி காக்கும்

sanakyan

மயிலத்தமடு-மாதவனை மேய்ச்சல் நிலங்கள் அழிப்பு: கால்நடை வளர்ப்பாளர்களின் போராட்டம் 1,500 நாட்களைக் கடந்துள்ள நிலையில் மீண்டும் சட்ட நடவடிக்கை குறித்து சாணக்கியன் பரிசீலனை

September 14, 2026

கடந்த இரண்டு மாதங்களில், மயிலத்தமடு மற்றும் மாதவனைப் பகுதிகளில் நிலைமை மிகவும் தீவிரமடைந்துள்ளது. பாரம்பரிய மேய்ச்சல் நிலங்கள் திட்டமிட்டு தீயிட்டுக்

news18-2026-06-28T062954.548-2026-06-bc99048549707a39ca182d6df5cdc02a-1200x800

“ஆபாச அரசியல் திமுகவிற்குப் புதிதல்ல!” – முதலமைச்சர் விஜய் மீதான தனிப்பட்ட விமர்சனங்களுக்குத் தவெக ஐ.டி. விங் பதிலடி

September 14, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்பத்தினர் குறித்து திமுகவினர் தொடர்ந்து முன்வைக்கும் விமர்சனங்களுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக

former-dmk-minister-sekar-babu-has-darshan-in-the-general-queue-at-tiruvannamalai

திருவண்ணாமலை கோவிலில் ‘விஐபி’ தரிசனம் மறுப்பு: பொது வரிசையில் நின்று சாமி கும்பிட்ட முன்னாள் அமைச்சர் சேகர்பாபு!

September 14, 2026

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்குச் சாமி தரிசனம் செய்ய வந்த திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவுக்குச் சிறப்புத் தரிசனம் (VIP

paddy-lorry-stock-2026-09-13-22-56-11

தமிழகத்தில் முதற்கட்டமாக 401 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு: 42,000 டன் நெல் கொள்முதல்!

September 14, 2026

சென்னை: நடப்பு 2026-2027-ஆம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் பருவத்தில் (KMS), விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்முதல் செய்வதற்காகத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்

1774703-thirumavalavan-1

“ஆ. ராசாவின் பேச்சு அதிர்ச்சியளிக்கிறது; திமுக அரசியல் மாண்பைக் கடைப்பிடிக்கவில்லை!” – விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம்

September 14, 2026

சிவகாசி: திமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா பேசிய கருத்துகள் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக விடுதலைச்

dailythanthi_2026-09-14_ddqq5hw3_police33

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை: கார்களில் பொருத்தப்பட்டிருந்த கட்சிக் கொடிகள் அகற்றம்!

September 14, 2026

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல்

40

தேசிய அளவில் மு.க. ஸ்டாலின் தலைமையில் 3-வது அணி? – தேசிய அரசியலில் பரபரப்பு!

September 14, 2026

சென்னை: நாடாளுமன்ற மக்களவையில் தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரசுடன் முரண்பாட்டில்

da91b71b3f023fdab7c8f6e3264e44e6

“தவறு செய்தது தவெகவினராக இருந்தாலும் அதிரடி நடவடிக்கை!” – அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை

September 14, 2026

திண்டுக்கல்: சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தவறு செய்த காரணத்திற்காகத் தவெகவினர் பலர்

1200-675-27624842-thumbnail-16x9-sdew

மயிலாடுதுறை வந்தடைந்தது காவிரி நீர்: மலர் தூவியும் நெல்மணிகளுடனும் விவசாயிகள் வரவேற்பு!

September 14, 2026

மயிலாடுதுறை: மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் விஜய்யால் திறந்துவிடப்பட்ட காவிரி நீர், கடைமடைப் பகுதியான மயிலாடுதுறை மாவட்ட எல்லையை வந்தடைந்ததையடுத்து விவசாயிகள்

dt-next_import_h-upload_2024_04_15_816286-setc

தொடர் விடுமுறை நிறைவு: சென்னை திரும்புவோருக்காக 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

September 14, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை முடிந்து, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காகப் போக்குவரத்துத்துறை விரிவான

ஆ

முதலமைச்சர் விஜய்யின் பேச்சைக் கண்டித்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: ஆ. ராசா, மா. சுப்பிரமணியன் மீது வழக்குப் பதிவு!

September 14, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்யின் சட்டப்பேரவைப் பேச்சைக் கண்டித்து, சென்னையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக திமுக எம்.பி. ஆ. ராசா, முன்னாள்