நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 5 மற்றும் 6ஆம் திகதிகளில் ஏற்பட்ட கலவரத்தில் 10 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட பதிவான உயிரிழப்புக்களானது ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளதாக ஜனநாயகவாத கூட்டு எதிர்க்கட்சி விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதலைக் கட்டுப்படுத்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையிலான விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதை வரவேற்கும் அதேவேளை, வன்முறையைத் தடுக்கத் தவறிய சிறைச்சாலை அதிகாரிகளின் அலட்சியப்போக்கு மற்றும் மறைமுக நோக்கங்கள் குறித்து கூட்டு எதிர்க்கட்சி பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இன்று புதன்கிழமை (15) வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே கூட்டு எதிர்க்கட்சி இதனைத் தெரிவித்துள்ளது.