நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்தை பொறுப்பேற்பதாக தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். பொறுப்பேற்க முடியாது என்று ஒருபோதும் குறிப்பிடவில்லை.பொறுப்பில் இருந்தும் விலகவில்லை. எதிர்க்கட்சியினர் கொண்டு வரும் நம்பிக்கையில்லா பிரேரணையை சிறந்த முறையில் அரசாங்கமாக எதிர்கொள்வோம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் பூரண விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சிறைக்கைதிகளின் மனித உரிமையை பாதுகாப்பதை போன்று பொலிஸ் உத்தியோகத்தர்களின் மனித உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும்.
மனித உரிமைகளில் நிலை அடிப்படையில் வேறுபாடுகள் கிடையாது என்பதை எதிர்க்கட்சியினர் விளங்கிக் கொள்ள வேண்டும். அனைத்தையும் அரசியலுக்கு பயன்படுத்தும் கொள்கையில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் விடுபட வேண்டும் எனவும் தெரிவித்தார்.