ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் எல் நினோ வலுவடையக்கூடும்!

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள ‘எல் நினோ’ (El Niño) காலநிலை மாற்ற நிலை தற்போது ஆரம்ப நிலையில் பலவீனமாக இருந்தாலும், வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இது வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உலகளாவிய காலநிலை முன்னறிவிப்புகளின்படி, இந்த ‘எல் நினோ’ நிலை காரணமாக இலங்கை உட்பட உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் காலநிலை மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று அந்தத் திணைக்களத்தின் முன்னறிவிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் சுட்டிக்காட்டினார்.

வளிமண்டலவியல் திணைக்களம் முன்னதாக வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2027 ஜனவரி வரை ‘எல் நினோ’ நிலை மிகவும் தீவிரமடைவதற்கு 63% வாய்ப்புகள் உள்ளன.

இருப்பினும், அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA), இது தீவிரமடையாமல் இருப்பதற்கும் மூன்றில் ஒரு பங்கு (1/3) வாய்ப்புகள் இருப்பதாகக் குறிப்பிடுகிறது.

இந்த நிலையினால் தற்போதுள்ள தென்மேற்கு பருவமழை குறைவடையக்கூடும் என்று சுட்டிக்காட்டிய மெரில் மெண்டிஸ், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வழக்கமான மழையளவை விட அதிக மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

தற்போதுள்ள நீர் கொள்ளளவு மற்றும் எதிர்காலத்தில் கிடைக்கப்பெறவுள்ள மழைவீழ்ச்சியைக் கருத்தில் கொண்டு, நீரை மிகக் கவனமாக முகாமைத்துவம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதன்படி, விவசாய நடவடிக்கைகள், மின்சார உற்பத்தி மற்றும் குடிநீர் தேவைகளுக்காக நீரை சிக்கனமாகவும் முறையாகவும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, இந்தக் காலநிலை மாற்றத்திற்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்காக அனைத்து அமைச்சுகளையும் ஒன்றிணைத்து, எதிர்வரும் இரு வாரங்களுக்குள் விசேட வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்க நடவடிக்கை எடுப்பதாகச் சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்திகே தெரிவித்துள்ளார்.

‘எல் நினோ’ தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்காக, எதிர்வரும் பெரும் போக விவசாய நடவடிக்கைகளை உரிய காலத்திற்கு முன்னதாகவே ஆரம்பிக்குமாறு விவசாயிகளிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது

sa

சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!

October 11, 2026

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி மீது

thriuvu

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது கூட்டம்

October 11, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள

ind

Toronto இந்தியத் துணைத் தூதரகத்தால் ‘கனடாவில் இந்தியப் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்’ கருத்தரங்கு

October 11, 2026

கனடாவில் உள்ள இந்தியப் பெண்களுக்குக் கிடைக்கும் ஆதரவு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பெண்கள், சமூக அமைப்புகள், சட்ட மற்றும்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,