தாய்லாந்தில் 2,000 ஆண்டுகள் பழமையான ‘தமிழி’ எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அரிய வகை தங்க மோதிரம்

தாய்லாந்தின் பெட்சாபுரி மாகாணத்தில் நடைபெற்ற அகழாய்வில், 2,000 ஆண்டுகள் பழமையான ‘தமிழி’ எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அரிய தங்க முத்திரை மோதிரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது கிறிஸ்துவுக்குப் பின் இராஜேந்திர சோழனின் கடற்படைப் படையெடுப்புகளுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் தமிழர்கள் மிக நெருங்கிய வணிக மற்றும் கலாச்சாரத் தொடர்பைக் கொண்டிருந்தனர் என்பதற்கான உறுதியான வரலாற்றுச் சான்றாக உருவெடுத்துள்ளது.

தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கிற்கு தென்மேற்கே சுமார் 130 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ‘டான் யாய் தாங்’ என்ற கிராமத்தில் உள்ள நெல் வயல் ஒன்றில், உள்ளூர் மக்கள் சில மாதங்களுக்கு முன்பு பழமையான வெண்கல முரசுகளின் துண்டுகளைக் கண்டெடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, தாய்லாந்து அரசின் தொல்லியல் துறையான ‘Fine Arts Department’ கடந்த பெப்ரவரி மாதம் முதல் அங்கு தீவிர அகழாய்வை மேற்கொண்டு வருகிறது.

இந்த அகழாய்வு தளம் வரலாற்றுக்கு முந்தைய இரும்புக்காலத்தைச் (Iron Age – சுமார் 1,500 முதல் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது) சேர்ந்தது எனத் கணிக்கப்பட்டுள்ளது. இங்கு இதுவரை 8 மனித எலும்புக்கூடுகள், தங்க-வெண்கல ஆபரணங்கள் மற்றும் மண்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அங்குள்ள 4-ஆம் எண் எலும்புக்கூட்டின் அருகில் இரண்டு தங்க மோதிரங்கள் கிடைத்தன. அதில் ஒன்று சாதாரண தங்க வளையம், மற்றொன்றில் பழங்கால இந்திய எழுத்து வடிவமான பிராமி (தமிழி) எழுத்துக்கள் தலைகீழாக செதுக்கப்பட்டிருந்தன.

இந்த எழுத்துக்களை சிங்கப்பூர் ‘சார்’ குழுவின் கல்வெட்டு ஆய்வாளர் ரஞ்சித் குமார் மற்றும் தாய்லாந்து தொல்லியலாளர்கள் ஆய்வு செய்ததில், அது ‘புசரகிதாஸ’ எனப் பொறிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறிந்துள்ளனர். இதற்கு “பூச நட்சத்திரத்தால் பாதுகாக்கப்பட்டவர்” என்று பொருளாகும்.

தமிழறிஞர்களின் கூற்றுப்படி, இந்த மோதிரத்தை மெழுகிலோ அல்லது களிமண்ணிலோ அச்சடிப்பதற்காகத் தலைகீழாகப் பொறிக்கப்பட்டுள்ள அந்தத் தமிழ்ப் பெயர் ‘அளரி வைரதன்’என்பதைக் குறிக்கிறது. ‘அளரி’ என்பது வளமான மருத நிலத்தைக் குறிக்கும் தூய தமிழ்ச் சொல் என்று தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து தொல்லியல் துறையின் முதற்கட்ட கணிக்கின்படி, இந்த மோதிரம் பண்டைய இந்தியாவின் வணிகர் குலத்தைச் சேர்ந்த ஒரு பெரும் வணிகருடையதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ஏற்கனவே தாய்லாந்தின் கிராபி மற்றும் சூம்போன் ஆகிய கடலோரப் பகுதிகளில் இது போன்ற தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட பானை ஓடுகளும், சீல்களும் கிடைத்துள்ள நிலையில், இந்த புதிய தங்க மோதிரக் கண்டுபிடிப்பு பண்டைய கடல்வழி வணிகப் பாதையில் தமிழர்களின் ஆதிக்கத்தை மீண்டும் உலகிற்கு நிரூபித்துள்ளது.

தற்போது கண்டெடுக்கப்பட்ட ஆபரணங்கள் அனைத்தும் தாய்லாந்து ராட்சபுரி மாகாணத்தில் உள்ள ‘ப்ரா நகோன் கிரி’ தேசிய அருங்காட்சியகத்திற்குப் பாதுகாப்பு மற்றும் கூடுதல் ஆய்வுகளுக்காக மாற்றப்பட்டுள்ளன.

b

குற்றக் கும்பல்களுக்குக் கைக்குண்டு கிடைத்தது எப்படி?

September 13, 2026

தெஹிவளை வீடொன்று மீது அண்மையில் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பல முக்கியமான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

bom

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6 குண்டுத் தாக்குதல்கள்

September 13, 2026

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் திட்டமிட்ட குற்றக் கும்பல்களினால் 6 குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று தாக்குதல்கள் கல்கிஸ்ஸை பொலிஸ்

pa

காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை

September 13, 2026

இலங்கைச் சுங்கத் திணைக்களத்தினால் ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை” குறித்து

thal

தலைமன்னார் கடலில் மணல்மேட்டில் வழிதவறியவரை மீட்ட கடற்படையினர்

September 13, 2026

இலங்கை கடற்படையினர் தலைமன்னாருக்கு அப்பால் உள்ள கடலில் மணல்மேட்டில் வழிதவறிய நபர் ஒருவரை மீட்டதுடன், அந்த நபருக்கு தேவையான மனிதநேய

dailythanthi_2026-09-12_o3yec9f7_Chennai-mayor

“என் தலைவரைச் சீண்டினால் யாராக இருந்தாலும் விடமாட்டோம்!” – முதலமைச்சர் விஜய்க்கு மேயர் பிரியா ஆவேச எச்சரிக்கை

September 12, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மிசா சட்டம் மற்றும் மு.க. ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதைக் கண்டித்து, சென்னையில் நடைபெற்ற திமுக

1693_12_3_2021_19_53_17_1_MALLAI_SATHYA_MDMK_MADURANTAGAM

இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: திராவிட வெற்றிக் கழகத் தலைவர் மல்லை சத்யா அறிவிப்பு!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாகத் திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா

13

“ப்யூஸ் போன தவெக அரசு”: மின்வெட்டு மற்றும் ஆவின் பால் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் பால் தட்டுப்பாடு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், மக்களைத்

vanniyarasu (1)

“சமூகநீதி குறித்துத் திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

September 12, 2026

சென்னை: சமூகநீதி விவகாரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க எவருக்கும் தகுதி இல்லை எனச்

1200-675-27618532-thumbnail-16x9-kovai-bus

கோவையில் அதிர்ச்சி: அரசுப் பேருந்தின் தானியங்கி கதவில் சிக்கிய மூதாட்டி – ரத்தம் வழிந்ததால் பயணிகள் கொந்தளிப்பு!

September 12, 2026

கோயம்புத்தூர்: கோவையில் பயணிகள் முழுமையாக ஏறுவதற்குள் அரசுப் பேருந்தின் தானியங்கி கதவு திடீரென மூடப்பட்டதில், மூதாட்டி ஒருவரின் முகம் கதவில்

1200-675-26640765-thumbnail-16x9-shanmugam (1)

இடைத்தேர்தலில் சிபிஎம் யாருக்கு ஆதரவு? நாளை திருச்சியில் முடிவு – பெ.சண்முகம்!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து நாளை திருச்சியில்

27617897_a

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிப் போராட்டம் – 50-க்கும் மேற்பட்டோர் கைது!

September 12, 2026

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை நீதிமன்ற உத்தரவின்படி தமிழிலும் சமமாக நடத்த வலியுறுத்தி, தடையை மீறிப் போராட்டத்தில்

ctr-2025-12-22-14-41-49

தமிழகத்தில் திடீர் மின்வெட்டுக்கு என்ன காரணம்? – மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் தொடர் மின்தடைக்கான காரணங்களை விளக்கி மின்துறை