சிறைக் கைதிகளும் மனிதர்களே! இப்படிப்பட்ட மனிதர்கள் இருந்த இடத்தில் ஏன் அப்படியொரு சம்பவம் இடம்பெற்றது?

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் போன்றதொரு சம்பவம் எமது ஆட்சியில் இடம்பெற்றிருக்கவே கூடாது. எனினும், இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

நீர்கொழும்பு சிறைச்சாலைச் சம்பவமானது சமூகத்திலுள்ள ஏற்றத்தாழ்வை வெளிப்படுத்தும் ஒரு குறியீடாகும். வறுமை எங்கு அதிகமாக உள்ளதோ, அங்கு கல்வி பின்தங்கியிருக்கும். இவ்வாறு வறுமையும் கல்வியறிவும் பின்தங்கியுள்ள இடங்களில் வன்முறைக் கலாசாரம் தலைதூக்கும்.

இதனால்தான், எமது அரசாங்கம் நாட்டு மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. மக்களை வறுமையிலிருந்து விடுவித்தால், அவர்கள் கல்வியில் எழுச்சி பெறுவார்கள்; தவறான கலாசாரமும் முடிவுக்கு வரும்.

சிறைக்கைதிகளும் மனிதர்களே! இப்படிப்பட்ட மனிதர்கள் இருந்த இடத்தில் ஏன் அப்படியொரு சம்பவம் இடம்பெற்றது? எமது இளைஞர்களைப் போதைப்பொருள் வியாபாரிகளாகவும், கொலைகாரர்களாகவும் மாற்றிய அவதூறான அரசியலை முன்னெடுத்தவர்கள் யார்? கடந்த கால ஆட்சியாளர்களே இப்படியான கலாசாரத்தைக் கொண்டுவந்தனர்.

யாழ்ப்பாணம் என்பது கலாசாரம் மற்றும் பண்பாட்டு ரீதியாகக் கொடிகட்டிப் பறந்த இடமாகும். ஆனால், இன்று அங்கு போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. போதைப்பொருள் வியாபாரிகளிடமிருந்து எமது பிள்ளைகளைப் பாதுகாத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தற்போது நாடு தழுவிய ரீதியில் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும், இது தொடர்பாக இன்னும் பல கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

கடந்த 1983ஆம் ஆண்டில் குட்டிமணி உட்பட 53 தமிழ்க் கைதிகள் இரண்டு நாட்களாகக் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இதற்குப் பின்னணியில் அரசியல்வாதிகள் இருந்தனர். நாம் தற்போது அரசியல் ரீதியில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றோம்.

ஆனாலும், சுயநலமிக்க அரசியல்வாதிகள் பழைய கலாசாரத்தையே விரும்புகின்றனர். நீர்கொழும்பு சம்பவம் அதன் ஓர் அங்கமா என்ற சந்தேகமும் எழுகின்றது.

எமது ஆட்சியில் நீர்கொழும்பு சிறைச்சாலைச் சம்பவம் போன்றதொரு சம்பவம் இடம்பெற்றிருக்கக் கூடாது. இனிவரும் காலங்களில் அவ்வாறான சம்பவங்களுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.”- என்றார் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்.

2

நம் ஒற்றுமைக்கு சக்தி இருக்கிறது, அந்த சக்திக்கு நோக்கமும் உண்டு – நடிகர் தனுஷ்!

July 28, 2026

சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் தனது ரசிகர் மன்ற செயல்பாடுகளில் சமீபகாலமாக அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

754700354_1568716991311680_3574303954992461174_n

புளியம்பொக்கனை பாலம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

July 28, 2026

A35 பரந்தன்–முல்லைத்தீவு பிரதான வீதியின் 12ஆவது கிலோமீற்றர் பகுதியில் அமைந்துள்ள 40 மீற்றர் நீளமுடைய புளியம்பொக்கனை பாலம், புனரமைப்புப் பணிகள்

754126920_3989629514678608_5016126000290553254_n

ஊழலற்ற நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதை வலியுறுத்தும் வகையிலான ‘நேர்மை நடைபவனி

July 28, 2026

அரச சேவையின் தரம், வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தி ஊழலற்ற நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதை வலியுறுத்தும் வகையிலான ‘நேர்மை

759299420_1728341295963057_5986583890373510739_n

அமெரிக்க உயர்ஸ்தானிகர் காரியாலய அரசிய அதிகாரி ரேச்சல் ஹக்கின்ஸிற்கும், ரவிகரன் எம்.பிக்குமிடையில் சந்திப்பு

July 28, 2026

இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அரசியல் அதிகாரி ரேச்சல் ஹக்கின்ஸ் அவர்களுக்கும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்குமிடையில்

court-judge-hammer-gavel-696x398

SJB நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு 1½ ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

July 28, 2026

2019 ஆம் ஆண்டு பொலிஸ் அதிகாரிகளுடன் தொடர்புடைய சம்பவம் தொடர்பாக பதுளை மேல் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பதுளை

758874719_1597010588461601_4345952432120067241_n

காணி விடுவிப்புத் தொடர்பில் மயிலிட்டி மக்களுடன் கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி…!

July 28, 2026

வலிகாமம் வடக்கு காணி விடுவிப்புத் தொடர்பாக, மயிலிட்டி மக்கள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

SAUDHI COURT

சவூதியில் இலங்கையருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை; சமூக ஊடக பதிவு தொடர்பில் தீர்ப்பு

July 28, 2026

சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவொன்றைத் தொடர்ந்து சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பல

E7OQZHSI4BFLXIQ6AVSVBLR2IE

பெர்லின் பிரைட் (Berlin Pride) நிகழ்வில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து மொன்றியல் ஃபியர்டே (Fierté Montreal) பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது

July 28, 2026

கடந்த வார இறுதியில் பெர்லின் பிரைட் நிகழ்வில் ஒரு நபர் கொல்லப்பட்டுப் பல காயமடைந்த தாக்குதலைத் தொடர்ந்து, மொன்றியல் ஃபியர்டே

IHRULYUKZJG3VPPAZFZSRKMH2M

சிறுவர்களை காரில் வைத்துக்கொண்டு அதிவேகமாக காரைச் செலுத்திய ஓட்டுநருக்கு வழக்கு பதிவு

July 28, 2026

திங்கட்கிழமை காலை 10 ஆவது வீதியில் (10th Line) மணிக்கு 50 கி.மீ வேகம் அனுமதிக்கப்பட்ட பகுதியில், மணிக்கு 93

savak

சாவகச்சேரி நகர சபையின் விசேட கூட்டம்

July 28, 2026

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் பதவியிலிருந்தும் நகர சபை உறுப்புரிமையில் இருந்தும் ஞானப்பிரகாசம் கிஷோரை நீக்கி

arjun

அர்ச்சுனா இராமநாதனுக்குப் பிணை

July 28, 2026

கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நேற்று (27) ஒரு சட்டத்தரணி

ne

நீர்கொழும்பு சிறை கலவரம்;சந்தேக நபர்களாக நால்வர்!

July 28, 2026

அண்மையில் நடைபெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் தொடர்பில் நான்கு பேர் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். கடந்த 5ஆம் மற்றும் 6ஆம்