நீர்கொழும்பு சிறைக்கலவரம்; தமிழ் கைதிகளை படுகொலைசெய்வதற்காகவே அரசின் துணையோடு இடம்பெற்ற சிறைக் கலவரங்களிலிருந்து வேறுபடுகிறது!

கடந்தகாலங்களில் தமிழ் அரசியல் கைதிகளை படுகொலைசெய்வதற்காக
அரசே முன்னின்று
அரசே திட்டமிட்டு முன்னகர்த்தி,
அரசே துணைநின்று அரங்கேற்றிய வெலிக்கடைச் சிறைக்கலவரம், பிந்துனுவேவா புனர்வாழ்வு முகாம் கலவரம், களுத்துறைக் கலவரம் என்பவற்றிலிருந்து அண்மையில் இடம்பெற்ற நீர்கொழும்பு சிறைக் கலவரம் வேறுபடுவதாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக் காட்டியுள்ளார்.
அத்தோடு வெலிக்கடையிலும் பிந்துனுவேவாவிலும் களுத்துறையிலும் தமிழர்கள் என்ற நிலையில், கிட்டாத நீதி நீர்கொழும்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிட்டட்டும் எனவுந் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் 08.07.2026இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த 5,6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் மற்றுமொருமுறை அரசின் காவல் கட்டமைப்பின் தரநிலையை உலகுக்கு வெளிப்படுத்தி இருக்கிறது.
இதற்கு முன்னரும் இலங்கையின் சிறைகளில் கலவரங்கள் நடந்திருக்கின்றன.
அரசே முன்னின்று
அரசே திட்டமிட்டு முன்னகர்த்தி,
அரசே துணைநின்று அரங்கேற்றிய சிறைக்கலவரங்களில் இருந்து மேற்படி 2026-யூலை நீர்கொழும்பு சிறைக்கலவரம் வேறுபட்டு நிற்கிறது.
1983ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் சிங்கள கைதிகளால் வெட்டியும் குத்தியும் படுகொலை செய்யப்பட்டனர்.
வெவ்வேறான இரண்டு நாள்களில் 35பேர், 18பேர் என தமிழ் அரசியல் கைதிகள் வெட்டிக்கொலை செய்யப்பட்டமை தமிழர் மீது இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புத்தாக்குதலாகவே கருதப்படுகிறது.
நீதிமன்றில் மரணதண்டனை விதிக்கப்படும் போது, தனது இறுதி ஆசையை குட்டிமணி இவ்வாறு விபரித்தார்.
“எனது மரண தண்டனையை நிறைவேற்ற முன் என் கண்களை எடுத்து பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்கமுடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்”
சிறைச்சாலை அதிகாரிகளே அறைக்கதவுகளின் திறப்புகளை சிங்களக் கைதிகளுக்கு கொடுத்ததாக தப்பிப்பிழைத்தவர்களின் வாக்குமூலங்கள் சான்றுப்படுத்தின.
அப்போதைய அரசின் கட்டமைப்புகள் சிறைக்கலவரங்களையும் சிறைகளில் படுகொலைகளையும் முன்னின்று நடாத்தியதற்கு காலவெளியில் எண்ணற்ற சான்றுகள் காணப்படுகின்றன.
பிந்துனுவேவா புனர்வாழ்வு முகாம் இதற்கு மற்றொரு சான்று. அங்கு தங்கவைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர்கள் 27 பேர் 2000.10.25 அன்று கொல்லப்பட்டனர். 14 இளைஞர்கள் காயமுற்றனர். சம்பவ தினத்திற்கு முதல் நாள் “புலிக்குட்டிகளின் சதைகளை எங்கள் நாய்களுக்குப் போடுவோம்” என சிங்களத்தில் எழுதப்பட்ட சுவரொட்டிகள் முகாமைச்சுற்றி பல இடங்களில் காணப்பட்டதாகவும் குறித்த தாக்குதல் திட்டமிட்ட தாக்குதல் எனவும் பிந்தினுவேவா படுகொலைகளுக்கு பொலிசாரே பதில் கூறவேண்டும் எனவும் சிலுமின என்ற சிங்களப் பத்திரிகையே செய்தியை வெளிக்கொணர்ந்திருந்தது.
முன்னைய காலங்களில் அரச கட்டமைப்புகளால் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட இத்தகைய சிறைக்கலவரங்கள் இன்று அதே அரச கட்டமைப்பின் மனித நேயமற்ற, வினைத்திறனற்ற காவல் கட்டமைப்பை உலகுக்கு வெளிக்காட்டியுள்ளது.
வெலிக்கடையிலும் பிந்துனுவேவாவிலும் களுத்துறையிலும் தமிழர்கள் என்ற நிலையில், கிட்டாத நீதி நீர்கொழும்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிட்டட்டும் என நான் கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்
b

குற்றக் கும்பல்களுக்குக் கைக்குண்டு கிடைத்தது எப்படி?

September 13, 2026

தெஹிவளை வீடொன்று மீது அண்மையில் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பல முக்கியமான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

bom

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6 குண்டுத் தாக்குதல்கள்

September 13, 2026

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் திட்டமிட்ட குற்றக் கும்பல்களினால் 6 குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று தாக்குதல்கள் கல்கிஸ்ஸை பொலிஸ்

pa

காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை

September 13, 2026

இலங்கைச் சுங்கத் திணைக்களத்தினால் ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை” குறித்து

thal

தலைமன்னார் கடலில் மணல்மேட்டில் வழிதவறியவரை மீட்ட கடற்படையினர்

September 13, 2026

இலங்கை கடற்படையினர் தலைமன்னாருக்கு அப்பால் உள்ள கடலில் மணல்மேட்டில் வழிதவறிய நபர் ஒருவரை மீட்டதுடன், அந்த நபருக்கு தேவையான மனிதநேய

dailythanthi_2026-09-12_o3yec9f7_Chennai-mayor

“என் தலைவரைச் சீண்டினால் யாராக இருந்தாலும் விடமாட்டோம்!” – முதலமைச்சர் விஜய்க்கு மேயர் பிரியா ஆவேச எச்சரிக்கை

September 12, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மிசா சட்டம் மற்றும் மு.க. ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதைக் கண்டித்து, சென்னையில் நடைபெற்ற திமுக

1693_12_3_2021_19_53_17_1_MALLAI_SATHYA_MDMK_MADURANTAGAM

இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: திராவிட வெற்றிக் கழகத் தலைவர் மல்லை சத்யா அறிவிப்பு!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாகத் திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா

13

“ப்யூஸ் போன தவெக அரசு”: மின்வெட்டு மற்றும் ஆவின் பால் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் பால் தட்டுப்பாடு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், மக்களைத்

vanniyarasu (1)

“சமூகநீதி குறித்துத் திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

September 12, 2026

சென்னை: சமூகநீதி விவகாரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க எவருக்கும் தகுதி இல்லை எனச்

1200-675-27618532-thumbnail-16x9-kovai-bus

கோவையில் அதிர்ச்சி: அரசுப் பேருந்தின் தானியங்கி கதவில் சிக்கிய மூதாட்டி – ரத்தம் வழிந்ததால் பயணிகள் கொந்தளிப்பு!

September 12, 2026

கோயம்புத்தூர்: கோவையில் பயணிகள் முழுமையாக ஏறுவதற்குள் அரசுப் பேருந்தின் தானியங்கி கதவு திடீரென மூடப்பட்டதில், மூதாட்டி ஒருவரின் முகம் கதவில்

1200-675-26640765-thumbnail-16x9-shanmugam (1)

இடைத்தேர்தலில் சிபிஎம் யாருக்கு ஆதரவு? நாளை திருச்சியில் முடிவு – பெ.சண்முகம்!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து நாளை திருச்சியில்

27617897_a

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிப் போராட்டம் – 50-க்கும் மேற்பட்டோர் கைது!

September 12, 2026

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை நீதிமன்ற உத்தரவின்படி தமிழிலும் சமமாக நடத்த வலியுறுத்தி, தடையை மீறிப் போராட்டத்தில்

ctr-2025-12-22-14-41-49

தமிழகத்தில் திடீர் மின்வெட்டுக்கு என்ன காரணம்? – மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் தொடர் மின்தடைக்கான காரணங்களை விளக்கி மின்துறை