நீர்கொழும்பு சிறைச்சாலை நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகவே அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடாத்தினர்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (06) ஏற்பட்ட சம்பவத்தின் போது பாதுகாப்புப் பிரிவினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் இன்று (07) விளக்கமளித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஆணையாளர் நாயகம், சிறைக்கைதிகள் சிறைச்சாலையின் முதலாவது இரும்புக்கதவை உடைத்துக் கொண்டு மரக்கதவு அருகில் வரை வந்திருந்ததாகவும், மரக்கதவையும் உடைத்து அவர்கள் வெளியேறியிருந்தால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் போயிருக்கும் என்றும் கூறினார்.

அத்துடன், இரும்புக்கதவை உடைத்துக்கொண்டு வந்த கைதிகள், அங்கிருந்த சிறை அதிகாரிகளைத் தாக்கியுள்ளதாகவும், சிறை அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் கைதிகள் தப்பியோடுவதைத் தடுப்பதற்கும் எடுக்கக்கூடிய ஒரேயொரு வழிமுறையாகவே பாதுகாப்புப் பிரிவினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் இங்கு தெரிவித்தார்.

இது குறித்து சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“சிறைச்சாலை வளாக அமைப்பின்படி பிரதானமாக இரண்டு கதவுகள் உள்ளன. முதலாவதாக இரும்புக்கதவும், அதற்கு அடுத்ததாக மரக்கதவும் இருக்கும். இந்தக் கைதிகள் இரும்புக்கதவை உடைத்துக்கொண்டு மரக்கதவை நோக்கி வந்திருந்தனர். இந்த மரக்கதவுக்கும் இரும்புக்கதவுக்கும் இடைப்பட்ட பகுதியில் தான் பெறுமதிமிக்க உபகரணங்கள் உள்ளன. இந்தக் கைதிகள் இரும்புக்கதவை உடைத்து, இந்த மரக்கதவையும் உடைத்துக்கொண்டு வெளியே வந்திருந்தால் ஏற்பட்டிருக்கக்கூடிய அழிவை என்னால் மதிப்பிட முடியாது. எனவே, இந்த நேரத்தில் சிறை அதிகாரிகள் தங்களது உயிரைப் பணையம் வைத்து இவ்வாறு செயற்படாவிட்டிருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும். சிறை அதிகாரிகள் அவ்வாறு செயற்படாவிட்டிருந்தால் மிகப்பெரிய அழிவு ஏற்பட்டிருக்கலாம்.

அனைத்து சம்பவங்களும் நடந்து முடிந்திருந்த ஒரு சூழலில், அவர்கள் இரும்புக்கதவை உடைத்து மரக்கதவு அருகில் வரை வந்துவிட்டனர். அந்த நேரத்தில் எங்களது சிறை அதிகாரிகள் பெரும் எண்ணிக்கையானோர் உள்ளே கைதிகளுக்கு மத்தியில் சிக்கியிருந்ததோடு, அவர்கள் தாக்கப்பட்டுக்கொண்டிருந்தனர்.

கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தடுத்து அவர்களைக் காப்பாற்றுவதற்காகவே அதிகாரிகள் அந்த வளாகத்திற்குள் சென்றிருந்தனர். ஆனால், அந்த அதிகாரிகளும் உள்ளே சிக்கிக்கொண்டனர். அந்த நேரத்தில் தான் கைதிகள் இரும்புக்கதவை உடைத்துக்கொண்டு வெளியே வந்துள்ளனர். இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகவே அதிகாரிகள் அந்த மரக்கதவூடாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.” என்றார்.

b

குற்றக் கும்பல்களுக்குக் கைக்குண்டு கிடைத்தது எப்படி?

September 13, 2026

தெஹிவளை வீடொன்று மீது அண்மையில் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பல முக்கியமான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

bom

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6 குண்டுத் தாக்குதல்கள்

September 13, 2026

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் திட்டமிட்ட குற்றக் கும்பல்களினால் 6 குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று தாக்குதல்கள் கல்கிஸ்ஸை பொலிஸ்

pa

காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை

September 13, 2026

இலங்கைச் சுங்கத் திணைக்களத்தினால் ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை” குறித்து

thal

தலைமன்னார் கடலில் மணல்மேட்டில் வழிதவறியவரை மீட்ட கடற்படையினர்

September 13, 2026

இலங்கை கடற்படையினர் தலைமன்னாருக்கு அப்பால் உள்ள கடலில் மணல்மேட்டில் வழிதவறிய நபர் ஒருவரை மீட்டதுடன், அந்த நபருக்கு தேவையான மனிதநேய

dailythanthi_2026-09-12_o3yec9f7_Chennai-mayor

“என் தலைவரைச் சீண்டினால் யாராக இருந்தாலும் விடமாட்டோம்!” – முதலமைச்சர் விஜய்க்கு மேயர் பிரியா ஆவேச எச்சரிக்கை

September 12, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மிசா சட்டம் மற்றும் மு.க. ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதைக் கண்டித்து, சென்னையில் நடைபெற்ற திமுக

1693_12_3_2021_19_53_17_1_MALLAI_SATHYA_MDMK_MADURANTAGAM

இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: திராவிட வெற்றிக் கழகத் தலைவர் மல்லை சத்யா அறிவிப்பு!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாகத் திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா

13

“ப்யூஸ் போன தவெக அரசு”: மின்வெட்டு மற்றும் ஆவின் பால் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் பால் தட்டுப்பாடு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், மக்களைத்

vanniyarasu (1)

“சமூகநீதி குறித்துத் திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

September 12, 2026

சென்னை: சமூகநீதி விவகாரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க எவருக்கும் தகுதி இல்லை எனச்

1200-675-27618532-thumbnail-16x9-kovai-bus

கோவையில் அதிர்ச்சி: அரசுப் பேருந்தின் தானியங்கி கதவில் சிக்கிய மூதாட்டி – ரத்தம் வழிந்ததால் பயணிகள் கொந்தளிப்பு!

September 12, 2026

கோயம்புத்தூர்: கோவையில் பயணிகள் முழுமையாக ஏறுவதற்குள் அரசுப் பேருந்தின் தானியங்கி கதவு திடீரென மூடப்பட்டதில், மூதாட்டி ஒருவரின் முகம் கதவில்

1200-675-26640765-thumbnail-16x9-shanmugam (1)

இடைத்தேர்தலில் சிபிஎம் யாருக்கு ஆதரவு? நாளை திருச்சியில் முடிவு – பெ.சண்முகம்!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து நாளை திருச்சியில்

27617897_a

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிப் போராட்டம் – 50-க்கும் மேற்பட்டோர் கைது!

September 12, 2026

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை நீதிமன்ற உத்தரவின்படி தமிழிலும் சமமாக நடத்த வலியுறுத்தி, தடையை மீறிப் போராட்டத்தில்

ctr-2025-12-22-14-41-49

தமிழகத்தில் திடீர் மின்வெட்டுக்கு என்ன காரணம்? – மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் தொடர் மின்தடைக்கான காரணங்களை விளக்கி மின்துறை