தூத்துக்குடி:
தவெக எம்.எல்.ஏ விஜி சரவணன் தன் மீது சுமத்திய ரூ. 50 கோடி பேரம் மற்றும் கொலை மிரட்டல் குற்றச்சாட்டுகளை, தி.மு.க. எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் முழுமையாக மறுத்துள்ளார். திருச்செந்தூர் காவல் நிலையத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜி சரவணனின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் விளம்பரத்திற்காகவே அவர் இவ்வாறு பேசி வருகிறார் என்றும் கூறினார்.
தமிழக அரசியலில் தவெக மற்றும் தி.மு.க. இடையே நிலவும் குதிரை பேரம் குறித்த சர்ச்சைகள், இரு தரப்பு தலைவர்களின் கருத்துக்களால் மேலும் தீவிரம் அடைந்துள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இத்தகைய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
#AnithaRadhakrishnan #DMK #Tvk #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #BriberyCase #Politics2026 #PoliticalControversy #TamilNaduPolitics #PoliticalStance #TamilNaduNews #PoliticalAttack #PositiveGovernance #AssemblyDebate #VijayGovernment #Debate #TNPolitics #PoliticalNews #AdministrativeReform #GovernmentAccountability #PoliticalConduct #PublicRepresentation #Justice #PoliticalClash