சென்னை:
முதலமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் மற்றும் வாக்காளர்கள் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தன. நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விசாரணையில், முதலமைச்சர் விஜய் 3 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும், திருச்சி கிழக்குத் தொகுதி வழக்கு, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு ஆகியோருக்கு எதிரான தேர்தல் வழக்குகளிலும் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் வெற்றியைச் சவாலுக்கு உட்படுத்தியுள்ள இந்த வழக்குகள், வரும் காலங்களில் முக்கியத் திருப்பங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#Vijay #HighCourt #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #LegalBattle #Politics2026 #ElectionPetition #MadrasHighCourt #TamilNaduPolitics #PoliticalStance #TamilNaduNews #PoliticalAttack #PositiveGovernance #AssemblyDebate #VijayGovernment #Debate #TNPolitics #PoliticalNews #AdministrativeReform #GovernmentAccountability #PoliticalConduct #PublicRepresentation #Justice #PoliticalClash