கரும்புலிகள் தினமான நேற்றைய தினம் (ஜுலை 05) ஞாயிற்றுக்கிழமை கரும்புலிகளான கப்டன் மில்லர் மற்றும் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி ஆகியோரின் பெற்றோருக்கு மதிப்பளிக்கப்பட்டது.
தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்த கரும்புலிக் கப்டன் மில்லர் அவர்களின் தாயார் மற்றும் கடற்கரும்புலிக் கப்டன் அங்கயற்கண்ணி அவர்களது தாயார் ஆகியோர் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜீவனால் பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டுள்ளனர்.
1987ஆம் ஆண்டு ஜுலை மாதம் 5ஆம் திகதி நெல்லியடியிலுள்ள இராணுவ முகாம் மீது கரும்புலித் தாக்குதலைக் கப்டன் மில்லர் மேற்கொண்டார்.
காங்கேசன்துறைக் கடற்பரப்பில் தரித்து நின்ற கடற்படைக் கப்பல் மீது கடற்கரும்புலி அங்கயற்கண்ணி 1994ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி தாக்குதல் நடாத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி:: jaffnazone