சென்னை:
குதிரை பேரம் விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். குதிரை பேரம் உண்மையாகவே நடக்கும் பட்சத்தில், ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
அ.தி.மு.க.-வை தவெக வளைக்க முயற்சிக்கும்போது, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏன் வாய் திறக்காமல் மௌனம் காக்கிறார் என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். தி.மு.க. மற்றும் தவெக ஆகிய இரு தரப்பும் மாறி மாறி குதிரை பேரம் குறித்துப் குற்றம் சாட்டி வரும் வேளையில், இதில் சம்பந்தமே இல்லாத எங்களிடம் கேள்வி கேட்பது பொருத்தமற்றது என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழக அரசியல் சூழல் தற்போது மிகவும் பதற்றமாக உள்ள நிலையில், திருமாவளவனின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
#Thirumavalavan #VCK #HorseTrading #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #PoliticalAnalysis #Politics2026 #GovernorArlekar #TamilNaduPolitics #PoliticalStance #TamilNaduNews #PoliticalAttack #PositiveGovernance #AssemblyDebate #VijayGovernment #Debate #TNPolitics #PoliticalNews #AdministrativeReform #GovernmentAccountability #PoliticalConduct #PublicRepresentation #Justice #PoliticalClash