பளைப் பிரதேசத்தில் தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களுடைய தனியார் காணிகளை உரிய உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக, காணி உரிமையாளர்களுடன் இன்று முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றது.
இச்சந்திப்பில், காணி மீளளிப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துதல், உரிமையாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் நடைமுறைப்படுத்த வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மக்களின் சட்டபூர்வமான காணி உரிமைகளை உறுதிப்படுத்தி, நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைக்கு நிலையான தீர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது